12 நெற்றியிற் பூதிப்பொடி தூள்கள் பட்டாலும் நீங்காப் பிணியெல்லாம் நீங்கும் - வந்து சற்றே மிதித்தாலும் எல்லவர்க்கும் சிவ தன்மநினைவை யுண்டாக்கும் - பூர்வ கன்ம வினைகளைப் போக்கும் - மறு சென்ம மெடாமலே காக்கும் (தில்லை) இதுபோலவே மற்றைய சரணங்களும் சிவபக்தியையும் சிவபுண்ணியத்தையும் எடுத்துக் கூறுகின்றன. இக்கீர்த்தனங்களால் கவிராயருடைய சைவசமயப் பற்று இனிது விளங்கும். |