14

சக்கரவர்த்தியோடு அயோத்திக்கு எழுந்தருளி வரும் வழியில் பரசுராமன்
எதிர்ப்படுதலும் அவன் இராமனுடன் விவாதம் செய்து தனது வில்லை
வளைக்கக் கூறுதலும் வில்லை வளைத்து இராமன் அதற்கு இலக்குக்கேட்க
பரசுராமன் தனது தவத்தை இலக்காக்கிப் பணிந்து போதலும் தசரதன்
மகிழ்ந்தலும் பின்யாவரும் அயோத்தி வந்தடைதலும் கூறப்படுகின்றன.

அயோத்தியாகாண்டம்

     அயோத்தி வந்தபின் பரதனும் சத்துருக்கனும் கேகய நாட்டிற்குச்
செல்லுதலும் பின் தசரதன் வசிஷ்டர் மந்திரிமார்களுடன் இசைந்து
இராமனுக்கு முடிசூட்ட எண்ணி இராமனை வேண்டுதலும். அவன் ஒப்பவே
ஐம்பத்தாறு தேசராசர்களுக்கும் செய்தி தெரிவிக்க அவர்கள் அயோத்தி வந்து
குழுமுதலும் அயோத்திநகரம் அலங்கரிக்கப்படுதலும் அதுகண்ட
மந்தரையாகிய கூனி ராமன்பால் கறுவு கொண்டிருந்தமையால் அதனைத்
தவிர்க்கக் கைகேயிடம் சென்று அவள் மனத்தைக் கலைக்க முதற்கண்
மனமகிழ்ந்து பரிசளித்தகைகேயி அவள் கூற்றில் மயங்கிச் சக்கரவர்த்தியோடு
வாதிட்டு அவன் தனக்கு முன்னொரு சமயம் தந்திருந்த வரங்களைப்
பயன்படுத்தி இராமன் சடைமுடி தாங்கி வனத்திற்குச் செல்லவும் பரதன்
முடிசூடவும் தசரதனிடம் வாக்குப் பெற்றுத் தானே இராமனை அழைத்துத்
தந்தையின் உத்தரவாகக் கூறிஇராமன் வனம் செல்ல ஏவுதலும் இராமன்
மகிழ்ந்து அவளிடம் விடைபெறுதலும் அதனை அறிந்த கோசலைவருந்திப்
புலம்பலும் இராமன் அவளைத் தேற்றி விடைதர வேண்டுதலும் இதனைக்
கேட்ட இலட்சுமணன் கைகேயி பரதன் முதலானோரை அழித்துத் தானே
இராமனுக்கு முடி சூட்டுவேன் எனக் கோபித்து ஆரவாரித்தலும் இராமன்
அவனது கோபத்தைத் தணித்துத் தந்தையின் கட்டளையை நிறைவேற்றுதலே
தருமம் என்று கூறி விடைபெறும்போது சுமித்திரை இலட்சுமணனுக்கு
அறிவுரை கூறி இராமனுக்குப் பாதுகாப்பாளனாகவும் தொண்டனாகவும் உடன்
செல்லப் பணித்தலும் இதனை அறிந்த சீதை வருந்திப் புலம்பி இராமனொடு
வாதிட்டுத் தானும் உடன்வர ஒப்பி மூவரும் வனஞ்செல்லுதலும் நகரமக்கள்
புலம்பலும் சுமந்திரன் அம்மூவரையும் தேரில் ஏற்றி நகர எல்லையில் விட்டு,
தான் திரும்ப மனமின்றி வருத்திப் புலம்பலும் இராமன் அவனுக்கு நீதிகூறி
அனுப்பிவைத்தலும் இராமன் பிரிவைத் தாளாது தசரதன் புலம்பலும்
சுமந்திரன் தனியே திரும்பியதறிந்து உயிர் நீத்தலும், பின்னர்
கங்கைக்கரையில் குகன் இராமன் இலக்குவன் சீதை ஆகியவர்களைப் படகில்
ஏற்றி வருதலும் இராமன் அன்பினைக்கண்டு மகிழ்ந்து தோழனாக ஏற்று
மகிழ்தலும் குகன் தனது குடிலிலேயே தங்கியிருக்க வேண்டுதலும் இராமன்
அவனுக்கு அனுமதி அமைதி கூறலும் சித்திர கூடத்தில் தங்கியிருத்தலும்
சித்திர கூடவளத்தை இராமன் சீதைக்குக்காட்டி வருணித்தலும் பின்னர் கேகய
நாட்டிலிருந்து திரும்பிய பரதன் சக்கரவர்த்தி இறந்தது கேட்டுப் புலம்பலும்
கைகேயியைக் காணுதலும் அவள் பெற்றவரத்தைக் கூறிமுடிசூட
வேண்டுதலும் பரதன் அவளை வெகுண்டு தூற்றலும் கோசலையைக் கண்டு
அவ்வஞ்சம்ஒன்றும் யானறியேன் என்று சத்தியங்கூறிச் சூளுரைகூறலும்
அவள் பரதனின் பண்பறிந்து போற்றலும்பின் பரிவாரங்களோடு இராமனை
மீண்டும் அழைத்துவரப் பரதன் கங்கைக்கரைச் சேர்தலும் அதனைக்கண்ட
குகன் பரதன் வருகையை மாறாக எண்ணி அவனோடு போர்புரிய எண்ணிச்
சினந்து சபதம் கூறலும். பின்னர் உண்மையறிந்து பரதனைப் பாராட்டலும்
இலட்சுமணன் பரதனையையும் சேனையையும் கண்டு வெகுண்டுஅவனை
அழிக்க இராமனை உத்தரம் வேண்டலும் இராமன் அமைதிகூறித்
தெளிவித்தலும். பரதன் இரமனைக்கண்டு அயோத்தி நிலைமை கூறலும்
தந்தை இறந்ததற்காக இராமன் வருந்திப்