15 புலம்பலும் அவனை வசிஷ்டர் தேற்றலும் பரதன் இராமனை மீண்டும் அழைத்துப் புலம்பலும் இராமன்பரதனுக்கு அறிவுரை கூறி அயோத்தியைப் பரிபாலிக்கச் சொல்லுதலும் பரதன் இராமனின் பாதுகையை வேண்டிப்பெற்றுப் பதினாலு ஆண்டுகள் முடிந்தநாளே மீண்டு வரவேண்டுமென்று கூறிவந்து பாதுகைக்குப் பட்டாபிஷேகம் செய்து தான் நந்திகிராமத்தில் தவக்கோலம் பூண்டு அயோத்தியைக்காத்தலும் கூறப்படுகின்றன. ஆரணியகாண்டம் இராமன் இலக்குமணன் சீதை இவர்கள் குகனிடம் விடைபெற்றுச் சித்திரகூடத்தைக் கடந்து செல்லுங்கால் அத்திரிமுனிவர் அவர்களை வரவேற்றுத் தன் ஆசிரமத்தில் தங்கச் செய்தலும் அநசூயை சீதைக்கு அணிகலன்கள் அணிவித்து மகிழ்தலும் பின் அகத்திய முனிவரைக்கண்டு அவர் ஆசிரமத்தில் விருந்துண்டு அவரால்கொடுக்கப்பெற்ற வில்லை வாங்கிக் கொண்டு தண்டகாரண்யம் செல்லுதலும். செல்லும் வழியில் விராதன் எதிர்ப்பட்டு சீதையைத் தூக்கிச் செல்ல இராம இலக்குவர்கள் அவனைச் சோதிக்க அவன் உடல் நீங்கிச் சாபநீக்கப் பெற்று இராமனைத் துதித்துப் போற்றலும். தண்டகவன இருடிகள் இராமனை வரவேற்று மகிழ்ந்து அரக்கர்களால் தாம் படும் துன்பங்களைக் கூறிவேண்டலும் முனிவர்களுக்கு அபயமளித்து அரக்கரை அழித்துத் தருமத்தை நிலைபெறுத்துவதாக இராமன் கூறலும் பின்னர் பஞ்சவடி சென்று இலக்குவன் பர்ணசாலை அமைக்க அதில் மூவரும் தங்கியிருத்தலும் இலக்குவன் ஊண் உறக்கம் தவிர்த்து இராமனுக்குப் பணிசெய்து வருவதும் சடாயுவைக் கண்டு அவன் வரலாறு அறிந்து மகிழ்தலும் சடாயு அவர்களைக் காத்துவருதலும் பின் சூர்ப்பநகை இராமனுடைய பேரழகில் மயங்கிக் காமவல்லியாக உருமாற்றிக் கொண்டுவந்து இராமனைத் தன்னை மணக்கும்படி வேண்டலும் இராமன் தக்க ஏதுக்கள் கூறி மறுத்தலும் சீதையைக்கண்டு அவள், சீதை உள்ளவரை இராமன் தன்னை விரும்பமாட்டான் என்று கருதி அவள் தனியே இருக்கும்போது அவளைத் தூக்கிச் செல்ல முயல்தலும் அதுகண்ட இலக்குமணன் அவளைத் தடுக்க அவள் எதிர்க்க அவளது மூக்கும் காதும் முலைக்கண்ணையும் வாளால் அவன் சோதித்தலும் உறுப்புக் குலைந்த சூர்ப்பநகை கரதூஷணர்களைக் கூவிப்புலம்பி மீண்டும் இராமனை அணுகி வேண்டலும் அவன் மறுத்து அச்சுறுத்தப்பொறாதவளாய் கரனிடத்தில் சென்று முறையிடலும் அதுகேட்டுக் கரனும் தூஷணனும் திரிசிரனும் இராமனோடு போரிடச் சேனையொடு புகுதலும் இராமன் அவர்களையும் சேனைகளையும் கொன்றழித்தலும் அதுகண்டஞ்சியசூர்பநகை இராவணனிடத்தில் சென்றுமுறையிட்டுப் புலம்பலும். இராவணன் காரணம் கேட்க அவள் இராமஇலக்குவர்களைப் பற்றி வருணித்துக் கூறலும் கரன் முதலியோர் மாண்டமை கூறலும். சீதையின் பேரழகைக்கூறி அவளைச் சிறை எடுக்கமுற்பட்டதற்காக இலக்குவன் தன்னைச் சோதித்ததாகக் கூறலும். இராவணன் சீதையின் பேரழகைக் கேட்டு அவள் மீது அளவற்ற காமங்கொள்ளுதலும் அவளை அபகரித்து வரஎண்ணி இராமஇலக்குவரை அவளிடமிருந்து பிரிக்க மாரீசனை மாயமானாகச் செல்ல வேண்டுதலும் அவன் புத்திமதிகூறலும் அதனைக் கேளாமல் இராவணன் அவனைச் சினத்தலும். அவன் பொன்மானாகச் சீதைமுன் உலாவ அதனைப் பிடித்துத் தருமாறு சீதை இராமனை வேண்டலும் அப்போது இலக்குவன் அதுமாயமான் என்று தடுத்துக்கூறியும் இராமன் மானைப் பிடிக்கச் சென்று அது அரக்கனின் மாயை என்று கண்டு அதனைக்கொல்லுதலும் மாரீசன் அபயம் கூறுதலும். அது கேட்ட சீதை இலக்குவனைப் போகச் சொல்லுதலும் இலக்குவன் |