16

இராமனது ஆற்றலை எடுத்துக் கூறலும் சீதை சினத்தலும் பின் இலக்குமணன்
அண்ணனைக் காணச் செல்லுதலும், அவ்வமயம் இராவணன் சந்தியாசி
கோலத்தில் வந்து சீதையுடன் உரையாடித் தன் நோக்கத்தைக் குறிப்பாற் கூற
அவள் வெகுண்டுரைக்கத் தன் சுயரூபத்தைக்காட்டி அவளை அச்சுறுத்திப்
பர்ண சாலையொடு பெயர்த்தெடுத்துத் தன் தேரில் வைத்துக்கொண்டு
போதலும் அதனைக் கண்ட சடாயு இராவணனை எதிர்த்துப்புத்திகூறலும்
அவன் கேளாமல் இகழ்தலும் சடாயும் தன் அலகாலும் இறக்கைகளாலும்
இராவணனோடு போரிடலும் சடாயுவை வெல்ல முடியாதென்று கண்ட
இராவணன் சிவனது வாளால் சடாயுவை வெட்டி வீழ்த்திச் செல்லுதலும் அது
கண்டு சீதை புலம்பலும், பின்னர் இராமனைக் கண்ட இலக்குவன்
நிலையைக்கூற இருவரும் வந்து சீதையைக் காணாமையால் இராமன்
புலம்பலும், புலம்பித்தேடிச் செல்லும்போது இராவணனுடைய ஆயுதங்கள்
முறிந்து கிடப்பதை போர் நிகழ்ந்த அடையாளத்தையும் வரும்போது
குற்றுயிராய்க் கிடந்த சடாயுவைக்கண்டு அவன்மேல் விழுந்து இராமன்
இரங்கலும் இராமன் தேவர்கள் மேல் சென்றமை கூறி இறத்தலும் இராமன்
சடாயுவுக்கு இறுதிக்கடன் செய்துவிட்டு ஒரிடத்தமர்ந்து சீதையின்
பிரிவாற்றாமல்புலம்பலும் இலக்குமணன் தண்ணீர் கொண்டு வரச்சென்று
ஆண்டுத் தன்மேல் மோகித்து வலிய வந்த அசோமுகியை மூக்கரிந்து
மீளுதலும் பின் இராம இலக்குவர் கிஷ்கிந்தை நோக்கிச் செல்லும் பொழுது
கவந்தன் அவர்களை அகப்படுத்தலும் இராம இலக்குவர் அவனைக் கொல்ல
அவன் சாபம் நீங்கித் தேவனாய் இராமனைத் துதித்தலும் பின் சபரியின்
ஆசிரமஞ்சென்று அவளால் உபசரிக்கப் பெற்று அவளுக்கு மோட்சம்
அருளிக் கிஷ்கிந்தை சேர்தலும் கூறப்படுகின்றன.

கிஷ்கிந்தா காண்டம்


     இராமஇலக்குவர் மதங்கர்வாழ் மலையின்மீது செல்லும்கால்
ஆண்டிருந்த அனுமான் மறைந்து இவர்கள் வருகை காணலும் அவர்களுடைய
தோற்றத்தைக் கண்டு வியத்தலும் அந்தணச் சிறுவனாக அவர்முன்
தோன்றலும் இராமன் வினவ அனுமான் தன்னைப்பற்றிக் கூறிச் சுக்கிரீவன்
நிலைமையைச்சொல்ல இராமன் மகிழ்தலும் அனுமார் சுக்கிரீவனை அழைத்து
வர அவன் வந்து இராமனைச் சரணடைதலும் இராமன் அபயமளித்து ஒரு
சகோதரனாக ஏற்றலும் சுக்கிரீவன் தேற்றித் துணிவு கூறலும் பின் சுக்கிரீவனை
வாலியொடு சண்டையிடுமாறு கூறி வாலியின் மேல் பாணம்விட்டு அவனைக்
கொல்லுதலும். அவன் அம்பெய்தவன் இராமன் என்று கண்டு பலவாறாக
இகழ்ந்து கூறலும் இராமன் மறைந்து நின்றமைக்குக் கூறலும் வாலி இராமன்
பரம்பொருள் என்று உணர்ந்து தன் பிழைபொறுக்க வேண்டிக்கொண்டு பின்
அங்கதனை அழைத்து இராமனுக்கு அடிமை செய்து உய்யக்கூறிச் சுக்கீரிவன்
பிழைபுரியினும் பொறுத்து காக்க வேண்டுமென்று வரங்கேட்டு
மோட்சமடைதலும் பின் இராமன் சுக்கிரீவனுக்கு முடிசூட்டி அறிவுரை கூறலும்.
வாலி இறந்தமைக்காகத் தாரை புலம்பலும் பின் அவள் அமைதியுறப் பின்னர்
இராமன் சுக்கிரீவனுக்கு இராசநீதி கூறலும். கார்காலம் வருதலும் இராமன்
சீதையை எண்ணிப் புலம்பலும் இலக்குவன் தேற்றலும் பின் கார்காலம்
முடிந்தும் சுக்கிரீவன் வராமையால் இராமன் வெகுண்டு இலக்குவனை
அவன்பால் அனுப்புதலும் சினந்து வந்த இலக்குமணனை தாரைஅனுமான்
முதலியோர் சமாதானப் படுத்திச் சுக்கிரீவனுக்குச் சொல்லிவிடச்
சுக்கிரீவன்தான் மதுவால் முடங்கிக் கிடந்தமையை எண்ணி மதுபானத்தை
நிந்தித்துக்கூறி இலக்குவனை அடைதலும்