17

அவனை இலக்குவன் இடித்துரைத்துரைத்தலும். சுக்ரீவன் பொறுத்தாற்றும்படி
வேண்டிப் பின் வானரப்படைகளைத் திரட்டலும் வானரப்படைகளின்
பெருக்கங் கூறுலும் இராமன் வானரப்படைகளைக் கண்டுமகிழ்ந்து
நாற்றிசையிலும் சீதையைத் தேட அவர்களைப் பணித்து அனுமானைத்
தெற்கே சென்று தேடிவரச்சொல்லித் தன் கணையாழியையும் கொடுத்தனுப்பச்
சம்பாதியால் சீதை இலங்கையில் இருப்பாள் என்று அறிந்து சாம்பவன்
அனுமானின் ஆற்றலை எடுத்துக்கூறிக் கடலைத் தாண்டி இலங்கை
செல்லுமாறு வேண்ட அனுமான் கடலைத் தாண்டிச் செல்லுதலும்.

சுந்தரகாண்டம்

     செல்லும்போது மைந்நாகமலையை அடக்கி அங்காரதாரையைக்
கொன்று இலங்கையில் தாவிக்குதித்தலும் வாயிற் காவல் புரிந்துவரும்
இலங்கணி எதிர்க்க அவளை அனுமான் அறைந்துவீழ்த்த அவள்
அனுமானை வாழ்த்தி மடிதலும். அனுமார் கோட்டைக்குள் புகுந்து சீதையைத்
தேடித்திரிதலும் இராவணன் அரண்மனையுள் புகுந்து தேடுதலும்
அப்பொழுது உறங்கும் மண்டோதரி இராவணன் கும்பகர்ணன்
முதலானோரைக் கண்டு வெகுண்டு பின்வந்த காரியத்தை முடிக்க
வேண்டுமென்று அமைதிகொண்டு அசோக வனத்திற்குச் செல்லுதலும் அங்கு
அரக்கியர் கூட்டத்தின் நடுவே சீதை இருப்பதைக்காணலும். அப்பொழுது
சீதை திரிசடையோடு முறையிட்டு வருந்திப் புலம்பலும் திரிசடைதான்கண்ட
கனவினைக் கூறி எல்லாம் நல்லபடியாக நடக்குமென்று சமாதானப் படுத்தலும்
அப்பொழுது இராவணன் அங்குவந்து சீதையிடம் தன் வேட்கையை உரைத்து
அடிபணிந்து வேண்டுதலும் சீதை அவனை எள்ளி வெகுண்டுரைத்தலும்.
அவன் அரக்கிமாருக்குக் கட்டளையிட்டு நீங்கியபின் சீதை வருந்திப்புலம்பி
உயிரைமாய்த்துக் கொள்ள  முயலுதலும் அப்பொழுது அனுமான்
இராமநாமத்தைச் சொல்லிக்கொண்டு வந்து நின்று இராமனுடைய அங்க
அடையாளங்களை வருணித்துக் கூறிக் கணையாழியைக் காட்டிக்கொடுத்தலும்
சீதை அதனைப்பெற்று உயிர்த்தளிர்தலும் பெருமகிழ்வுறலும் அனுமான்தன்
விசுவரூபத்தைக்காட்டலும். விம்மிதமுற்ற சீதை அனுமனை வாழ்த்தித் தான்
பிரிந்தபின் இராமஇலக்குவர்களுக்கு நேர்ந்த வரலாற்றைக் கூறச்சொல்ல
அவன் கூறலும் பின் அனுமான் தன்தோள்மீது சீதையை ஏற்றிக் கொண்டு
சென்று இராமனிடத்தில் சேர்ப்பதாக வேண்டலும் சீதை அதுசிறப்பாகாது
இராமனே வந்து அரக்கர்களை அழித்துத் தன்னை மீட்டுச் செல்ல வேண்டும்
அதுவே இராமனுக்கும் அவன் வில்லுக்கும் பெருமை என்று கூறி
இராமனிடத்துச் சொல்லுமாறு சில அடையாளங்கூறிச் சூடாமணியையும்
கொடுத்து வாழ்த்துதலும். அனுமான் இன்னும் எட்டு நாளைக்குள்
வானரசேனையோடுவந்து இராவணனையும் அவன் இளைஞரையும் வென்று
கொன்று மீட்டுச் செல்வதாகக் கூறி விடைபெறலும், விடைகொண்ட அனுமான்
அசோக வனத்தை அழித்தலும் அப்பொழுது எதிர்த்துவந்த கிங்கரர்களை
அழித்தலும் பின் சேனையொடு வந்து எதிர்த்த சம்புமாலியையும், பஞ்ச
சேனாதிபர்களையும் அட்சயனையும் கொன்று வீழ்த்தலும் இதனை அறிந்து
வந்த இந்திரசித்து அனுமானொடு போரிட்டுமெலித்தலும் இறுதியாக அவன்
பிரம்மாஸ்திரத்தை விட்டுப் பிணைத்தலும் பிணைத்து இராவணன்அவையில்
கொண்டுவந்து சேர்த்தலும் இராவணன் மிகச் சினந்து சீறிவினாவலும்
அவனுக்குச் சரியாக வாலின்மேல் வீற்றிருந்து அனுமான் தன்னை இராமதூதன்
என்று சொல்லிப் புத்திமதி கூறலும்.சீதையை விட்டு விட்டுச் சரணடையச்
சொல்லுதலும். அது கேட்ட இராவணன் அனுமானைக் கொல்ல