19 பாராட்டுதலும், பின்னர் வானர வீரர்களோடு சென்று இலங்கையை வளைத்தலும் இராவணன் கோட்டைவாயில் முதலான இடங்களுக்குக் காவல் அமைத்தலும் பின் இராமன் ஏவ அங்கதன் இராவணனிடம் தூதுபோய் அவனைப் பணியச் சொல்லுதலும் அவன் நய உரை கூற அங்கதன் மறுத்து அவனை இகழ்தலும் அவன்வெகுண்டு துரத்தலும், வந்து போர்கலத்திலே இனிச் செய் வேண்டுமென்று இராமனிடம் கூறுதலும், போர் தொடங்குதலும், அனுமானும் இராவணனும் கைக்குத்துச் சண்டையிடுதலும் ஒருவர் ஒருவரை வெல்லாமல் மீளுதலும் பின் இராமனும் இராவணனும் முதற்போரிடுதலும், இராவணன் ஆயுதம் முதலியவற்றை இழத்தலும் இன்றுபோய் நாளை வா என்று கூறி விடுத்தலும் மானமிழந்து நாணமுற்றுத் திரும்பிய இராவணன் போர்க்கள நிகழ்ச்சியை மாலியவானிடத்தில் கூறலும், மீண்டும் மாலியவான் புத்திசொல்ல மகோதரன் அவனைத் தடுத்துக் கும்பகருணனைப் போருக்குச் செலுத்துமாறு இராவணனிடம் கூறலும் கிங்கரர் கும்பர்ணனை எழுப்புதலும் அவன் எழுந்து ஊனும் கள்ளும் உண்டு பின் இராவணனிடம் வந்துநிலைமை தெரிந்து இராவணனுக்குப் புத்தி கூறுதலும், அவன் மறுத்துப் போர் புரிய ஏவ கும்பகர்ணன் போர்க்களம் வருதலும், அது கண்டு இராமன் விபீஷணனை வினவ அவன் கும்பகர்ணன் வரலாறு கூறுதலும், அவனைத் தம்மோடு சேருமாறு கூறி, அழைத்து வர இராமன் விபீஷணனை அனுப்ப அவன் சென்று அழைக்கவும் கும்பகர்ணன் மறுத்துத் தான் செஞ்சோற்றுக் கடன் கழிப்பது முறை என்றும் நீ அங்கேயே இரு என்றுகூற அவன் நீதிகளை எடுத்துக் கூறவும் கும்பகர்ணன் அவனை மறுத்துக் கூறி விடுத்தலும் மீண்டும் இருதிறத்துப் படைகளும் கடும்போர் புரிதலும், கும்பகர்ணன் இராமனோடு போரிடுதலும், இராமனால்கையும் காலும் அறுப்புண்டு விழுதலும் விழுந்த பின் தன் தலையைக் கடலில் அமிழ்த்து விடுமாறும் விபீஷணனைக் காக்குமாறும் கும்பகர்ணன் வரம்வேண்ட இராமன் அவ்வாறே அருளிச் செய்தலும் பின்னர் இராவணன் சீதையிடம் சென்று தன் ஆசையைக் கூறிக் கெஞ்சுதலும், சீதை இராவணனை இடித்துக் கூறலும், மகோதரன் மருத்தனைச் சனகன் உருவில் வரச் செய்து சீதையிடம் அழைத்துச்செல்ல மாயா சனகனைக் கண்ட சீதை உண்மையறியாது புலம்ப அப்பொழுது கும்பகர்ணன் மடிந்ததைத் தூதர்கள் வந்து இராவணனுக்குச் சொல்ல அதுகேட்டு இராவணன் புலம்புதலும் பின்னர் அதிகாயன் முதலானோரை இராவணன் போருக்கு அனுப்புதலும் அதிகாயன் வரலாற்றை விபீஷணன் இராமனுக்குக் கூறலும், அவனைக் கொல்ல தம்பியே போதுமென்று இராமன் சொல்ல இருபடைகளும் போர் மேற்கொண்டபின் இலக்குமணனும் அதிகாயனும் சண்டையிட இலக்குவன் அதிகாயனைக் கொல்லுதலும் அது கேட்டு இராவணன்புலம்ப அவன் முன்னே தானியமாலை அழுது புலம்பி அரற்றலும் பின்னர் இந்திரசித்துப் போர் மேற்கொண்டு வந்து அனுமானுடன் போரிடலும் இருவரும் ஒருவரை ஒருவர் இகழ்தலும் பின் இந்திரசித்து வானர சேனையை அழித்தலும் அதுகண்டு வெகுண்டு இலக்குவன் இந்திரசித்தோடு பொருதலும், ஆற்றாத இந்திரசித்து இளையவன் மேல் நாகபாசத்தை விட்டுக்கட்டுதலும் அவன் மூர்ச்சையாதலும், அதுகண்டு விபீஷணர் வருந்திப் புலம்புதலும், இராமர் தம்பிக்காகப் புலம்புதலும், கெருடபகவான் வருதலும் அவன் வரவால் நாகபாசம் விலகுதலும் கருடன் இராமனைப் போற்றித் துதித்துச் செல்லுதலும், பின் இரவில் போர் புரிந்து அரக்கச் சேனைகளை இராமன் அழித்தலும், இலக்குவனும் இந்திரசித்தும் இரண்டாம் முறை போர் புரிதலும் அப்பொழுது அனுமானும் அகம்பனும் போரிட அனுமான் அவனைக் கொல்லுதலும் அரக்கர் சேனைபல அழிதலும். |