20

அப்பொழுது இந்திரசித்து பிரம்மாஸ்திரத்தை விட்டு இலக்குவனை மூர்ச்சித்து
விழச் செய்துகோட்டை புகுதலும், தம்பிக்காக இராமர் புலம்பி அரற்றலும்
ஆகாயத்திலிருந்து தேவர்கள் இராமரைத் துதித்து அவர் பெருமையைக்
கூறலும். அது கேட்டுச் சீதை இரங்கலும், திரிசடை சீதையைத் தேற்றுதலும்,
சாம்பவான் அனுமாரைச் சஞ்சீவி கொண்டு வருமாறு வழிகூறி வேண்ட
அனுமான் செல்லுதலும் இராமன் மீண்டும் தம்பிக்காகக் புலம்பிச் சோர்தலும்
அவனை சாம்புவன் தேற்றலும், அனுமார்சஞ்சீவி பருவதத்தை அனுமான்
கொண்டு வந்து போர்களத்தில் வைத்தவுடன் இலக்குமணனும் மற்றைய
வீரர்களும் உயிர் பெற்று எழுதலும், இராமன் மகிழ்ந்து அனுமாரைப்
புகழ்தலும், வானரர் இலங்கையை நெருப்பிட்டு ஆரவாரித்தலும், அது
கேட்டெழுந்த இந்திரசித்து மாயா சீதையைப் படைத்து கொண்டுவருதலும்,
அனுமான் வேண்டவும் மறுத்து அவன் மாயா சீதையை வெட்ட அனுமான்
புலம்புகலும், அதுகேட்டு இராமர் புலம்பி அரற்றலும் இலக்குவன் அவனைத்
தேற்றலும் அனுமார் இராமரை முடுக்கலும் சீதையின் இருப்பைக் கண்டுவந்து
விபீஷணன் இராமனிடம் உரைத்தலும், இலக்குமணனுக்கு இராமர் யுத்த
தந்திரங்கள் கூறி இந்திரசித்தைப் பொருது அவன் தலையைக் கொண்டு
வருமாறு ஏவுதலும், இந்திரசித்தை அனுமார் பழித்தலும், இந்திரசித்துக்கும்
இலக்குமணனுக்கும் மூன்றாம் முறை யுத்தம் நிகழ்தலும் இலக்குமணனுக்குத்
துணையாக நிற்கும் விபீஷணனை இந்திரசித்து இகழ்ந்து அவன்மேல் வேலை
எறிதலும் அவன் எதிர் மொழிதலும், இந்திரசித்து மீண்டு வந்து தகப்பனிடம்
முறையிடுதலும், இராவணன் அவனை உதாசினம் செய்தலும் அவன் மீண்டும்
வந்து நாலாம் முறையாக இலக்குவனோடு போரிடுதலும் இலக்குவன்
அர்த்தசந்திரபாணத்தால் அவன் தலையைக் கொய்து இராமனிடத்துச்
சேர்தலும் அதுகேட்ட இராவணன் புலம்பியழுதலும் போர்க் களத்திற்குச்
சென்று இராவணன் தலையற்றுக் கிடக்கின்ற இந்திரசித்து உடலைக் கண்டு
புலம்பலும் உடலைக் கோட்டைக்குக் கொண்டுவந்தபின் ஓடிவந்த
மண்டோதரி மகன் உடம்பைக் கண்டு அழுது புலம்பலும். இவ்வளவிற்குக்
காரணம் சீதையே என்று வெகுண்ட இராவணன் அவளை வெட்டச் செல்ல
அவனை மகோதரன் தடுத்தலும் மூலபலத்தைப்பற்றித் தூதர் வந்து கூறலும்,
வன்னிசமர்த்துப் பேச மாலியவான் அவனை இடித்துரைத்தலும், மூலபல
சேனையைக் கண்ட வானர வீரர்கள் அஞ்சி ஓடுதலும் அங்கதன்
அவைகளைத் தடுத்தலும் சாம்பவன் அஞ்சிக் கூறலும் அங்கதன் சாம்புவனை
இடித்து வீரமரணம் பற்றிக் கூறுதலும், வானரர் போரிடமீளுதலும் இராமன்
ஒருவனே நின்று மூலபலச் சேனைகளைக் கொன்றழித்தலும்
மூலபலச்சண்டையின் விரிவான நிகழ்ச்சிகளும் பின்னர் இராவணன்
இலக்குவனோடு போரிடலும் பின் இராவணன் மூலபலப்படுகளக் காட்சியை
காணலும், இராமனுடைய பேராற்றலை மலியவான் புகழ்ந்து கூறலும்,
இராவணன்இராமனோடு போரிடத் தேர்ஏறுதலும், அபசகுனங்கள் பல
காணுதலும், மாதலி கொண்டுவந்த இந்திரன் தேரில் இராமன் ஏறிப்