21 போரிட வருதலும் தன்முன் வந்தெதிர்ந்த மகோதரனை இராமன் வதைத்தலும் கடைசி நாளில்இராவணனோடு இராமன் போரிட்டு அவன் சிரங்களையும் கரங்களையும் அறுத்து வீழ்த்தலும் அவன்மடிதலும் அதுகண்டு விபீஷணன் புலம்பலும், அவனை இறுதிக்கடன் செய்யுமாறு கூறி இராமன் ஏகுதலும் மண்டோதரி இராவணன் மேல் விழுந்து புலம்பி உயிர் விடுதலும் சீதைக்கு அனுமான் வெற்றிச்செய்தியைக் கூறி சோபனம் சொல்லுதலும் சீதை அனுமானை வாழ்த்தலும். விபீடணன் சீதையைஅழைத்துவா இராமன் அவளைத் தீயில் மூழ்கி எழுமாறு கட்டளையிடஅவள் தீயில் குளித்து எழுதலும் அவளுடைய கற்பாக்கினியில் சூடுண்ட அக்கினிதேவன் இராமனிடம் முறையிட்டுச் சீதையைப் புகழ்தலும்பிரம்மதேவன் இராமனைத் தோத்திரஞ் செய்தலும், இறைவனது கட்டளையால் தசரதன் தேவருடம்போடு வந்து மகனைத் தழுவிமகிழ்தலும் சீதையைப் புகழ்தலும் இராமன் கேட்ட வரங்களை அளித்துச்செல்லுதலும் அயோத்திக்கு யாவரும் புட்பக விமானத்தில் செல்ல முற்படும் போது இராமன்வசந்தனைக் கொண்டுவருமாறு அனுமானை ஏவ அவன் எமலோகம் முதலிய லோகங்களுக்குச் சென்று சுவர்க்கத்திலிருந்த வசந்தனைக் கொண்டு வருதலும், இராமர் இலங்கையில் அரக்கர்கள் மடிந்தபலஇடங்களைக் காட்டுதலும் பின் சேதுவைக் காட்டி அதன் பெருமை கூறுதலும், தாம்வந்த வழிகளைஅடையாளங் காட்டிக் கூறுதலும் அக்காலை அயோத்தியில் பரதன் உரியகாலம் முடிந்தும் இராமன் வரவில்லையே என்று புலம்புதலும் தான் அக்கினியில் மூழ்க எண்ணிச் சத்துருக்கனை ஆட்சிப்பணிபுரியுமாறு கூற அவன் அவளிடம் முறையிடுதலும் அப்பொழுது அனுமான் வந்து தீயை அவித்துவிட்டு இராமன் வருகையைக் கூறுதலும் வனவாசத்திலும் கிஷ்கிந்தையிலும் இலங்கையிலும் நிகழ்ந்த வரலாற்றை அனுமான் பரதனுக்குக் கூறுதலும் கூறிப்பரத்து வாசர் ஆசிரமத்திற்குச் சென்று பரதன் நிலையை அனுமான் இராமனுக்குக் கூற இராமன் மகிழ்ந்து பாராட்டித் தன்னுடன் உடன் உண்ணுமாறுகூறுதலும் பரத்துவாசர் ஆசிரமத்தில் யாவரும் விருந்துண்ணுதலும் பரத்துவாசருக்கு இராட்சதர்கள்மடிந்த வரலாறுகளை இராமன் கூறுதலும். குகன் இராமன் வரவில்லையே என்று வருந்துதலும், இராமன்முதலானோர் மீண்டு வந்து பரதனுக்குக் காட்சி கொடுத்தலும், பரதன் இராமன் திருவடிகளை வணங்கி மகிழ்தலும் யாவரும் மகிழ்தலும் நகரத்தையும் இராமனையும், சீதையையும் அலங்கரித்தலும்எல்லோரும் அயோத்தி செல்லுதலும் நகரத்தையும் இராமனையும், சீதையையும் அலங்கரித்தலும்எல்லோரும் அயோத்தி செல்லுதலும் பரதன் பட்டாபிஷேக மண்டபம் சோடித்தலும், இராமபட்டாபிஷேகம் நிகழ்தலும் தேவர் முதலானோர் மலர் மாரிபொழிந்து வாழ்த்தலும், இராமன்அரசாட்சி புரிதலும் பிறவும் கூறப்படுகின்றன. இறுதியில் மங்கள வாழ்த்தும், நூற்பயனும்கூறப்படுகின்றன. |