2
 

 எப்பொருளும் யாரும் இயல்பின் அறிவுறச்
செப்பிய வள்ளுவர்தாம் செப்ப வரும் - முப்பாற்குப்
பாரதம் சீராமகதை பழையமனுப் பண்டைமறை
நேர்வனமற் றில்லைநிகர்.

என்னும் திருவள்ளுவ மாலையில் வள்ளுவர் குறள் நூலுக்கு ஒப்பாகக்
கூறப்பட்டவற்றுள் ஸ்ரீராமகதையும் ஒன்றாக இருத்தலை நோக்கி அதனை
ஆழமாகப் பயின்றுவரும் போது வள்ளுவர் அறத்தை இலக்கணமாகவும்
இராமாயணத்தை அதற்கு இலக்கியமாகவும் கண்டார். அதனை நன்கு
கற்றுப்பலருக்கும் கற்பித்தார். அவைகளில் அமர்ந்து சொற்பொழிவு செய்தும்
வரலானார்.

இவர் ஒருசமயம் வாணிகத்தின் பொருட்டுப் புதுச்சேரிக்குச்
செல்லும் பொழுது தருமபுர ஆதினத்தின் ஆட்சியில் உள்ள சீகாழித்
திருமடத்தில் தங்கினார். அக்காலை தனக்குச் சகலபாடியான சிதம்பரம்
பிள்ளை என்பவர் ஆதீனத்துப் பண்டாரசந்நிதிகளின் விருப்பத்திற்கிணங்கத்
துறவுபூண்டு சீகாழிமடத்து நிருவாகத்தை மேற்கொண்டிருத்தலைக் கண்டு
அவரோடு அளவளாவி மகிழ்ந்தார். சிதம்பரம்பிள்ளையும் நன்கு கற்றுத்
தேர்ந்த புலமையும் கவிபாடும் திறமையும் பெற்றவர் ஆதலின் அவர்பாடிய
கட்டளைமாலை என்ற நூலை இவரிடம் காட்டி இவரது ஒப்புதலைப் பெற்று
மகிழ்ந்தார். பின்னர் அவர் சீகாழித்தலப் பெருமையை விளக்கும்
பள்ளுப்பிரபந்தம் ஒன்றுபாட முற்பட்டு முற்றுப்பொறாமலிருந்த அந்நூலைக்
கொடுத்து அதைமுடித்துத்தருமாறு கேட்டுக்கொண்டார். சீகாழியிலேயே வந்து
தங்கியிருக்கும்படியும் கேட்டுக்கொண்டார். அப்பள்ளுப் பிரபந்தத்தை
அன்றிரவே பாடி முடித்து அவரிடம் சொல்லிக் கொண்டு போக நினைத்தவர்
அவர் தன்னைப் பிரிந்துபோக விடார் என எண்ணி அதனை ஒரு தம்பிரான்
வசம் ஒப்பித்துத் தான்புதுவை சென்று விரைவில் மீளஇருப்பதையும்
சொல்லிக் கொண்டு புதுவைக்குப் புறப்பட்டார். புதுவைக்குச்சென்று
அங்கேயே சில நாட்கள் தங்கினார்.

மறுநாள் செய்தியறிந்த கட்டளைத் தம்பிரான் பள்ளுப் பிரபந்தத்தை
வாங்கிப் பார்த்தபோது கவிராயரின் புலமைத்திறத்தை வியந்தார். அவரை
இனிச் சீகாழியிலேயே தங்கச்செய்ய வேண்டுமென்று திட்டம் செய்து
வீடுஒன்றை ஏற்பாடுசெய்து தில்லையாடியில் இருந்த அவரது குடும்பத்தை
வரச்செய்து அவ்வீட்டில் குடியமர்த்தினார். அமர்த்திக் கவிராயவர்கள்
விரைந்து திரும்புவார்கள் இனிச்சீகாழியிலேயே இருப்பார் என்று கூறி
வேண்டியவற்றைச் செய்தார்.

புதுவையிலிருந்து திரும்பிய கவிராயர் வழியில் முன்போலவே
சீகாழிமடத்தில் வந்து தங்கினார்.முன்பு சொல்லிக்கொள்ளாமல்
சென்றதற்காகப் பொய்யாகக் கோபித்துக் குடும்பத்தை இங்குவரவழைத்துக்
குடியமர்த்திய செய்திகளை ஒன்றும் கூறாமல் அந்த வீட்டிற்கு இவரை
அழைத்துச் சென்றார். அங்குத் தனது குடும்பத்தாரைக் கண்ட கவிராயர்
வியந்து செய்தி முழுதும் அறிந்து கட்டளைத் தம்பிரானின் பேரன்பை
எண்ணிவியந்து இனிச் சீகாழியிலே இருப்பேன் என்றுகூறி அந்நாள்முதல்
சீகாழியில் வாழ்ந்து வரலானார். அன்று தொட்டு அவர் சீகாழி அருணாசலக்
கவிராயர் என்று வழங்கப்பட்டார். தம்பிரானுக்காகப்