23

காட்டுதல் முதலியவற்றான், காண்போருக்கு அவரவராக அவையவையாக
தோற்றமுறச் செய்யும் நிலைமையாகும்.

     அந்நாட்டியக் கூத்து ஒருவரோ, பலரோ நிகழ்ச்சி அல்லது கதை
மாந்தர்களை ஒப்பப் புனைவுசெய்து கொண்டு பாட்டு, பக்கஇசை
ஆகியவற்றுடனோ, அன்றி அவை இல்லாமலோ நடித்துக் காட்டுவதுநாட்டிய
நாடகம் எனப்படும் கதை நிகழ்ச்சிகளை நடமிகுவோரே பாடுவது போல
வாயசைப்பர். பக்கத்திலோ திரை மறைவிலோ அப்பாடலைப் பிறர் பாடுவர்
ஆதலின் அவர்களை வாரம் போடுவோர் என்று கூறுவர், வாரம் பாடுதல்
பெரும்பாலும் மகளிரேயாதலின் அவர்கட்குத் தோரிய மடந்தையர் என்று
பெயர் (தோரு+இயம்=தோரியம்=பாடலிசை, தோரு என்றும் வேர்ச்சொல்லின்
திரிபே(தொரு) தரு என அமைந்ததாகத் தெரிகிறது)

பொருந நாடகம்

     ஒரு நிகழ்ச்சியையோ, கதையையோ எடுத்துக் கொண்டு அக்கதை
மாந்தர்களைப் போல வேடம்புனைந்து கொண்டு வினையங்காட்டி நடிப்பது
ஊமை நாடகம் எனப்படும், ஊமை நாடகத்தின் கதைநிகழ்ச்சியைத்
திரைமறைவிலிருந்து கூறுவதும் உண்டு, உரையாடல்களையும் பாட்டுக்களையும்
கதைமாந்தர் வேடம் புனைந்தவர்களே வினையங்களின்றி
அவ்வுணர்வுகளைக் குரலிலும் சொல்லிலும் ஏற்றிமெய்பாட்டுடன் நடிப்பது
பொருந நாடகமாகும். இத்தொகைச் சொல் முதல் குறைந்து நாடகம் என
வழங்கத் தலைப்பட்டபொழுது, வினையங்காட்டி நடிக்கும் கலை நாட்டியம்
என வழங்கத் தலைப்பட்டது.

     உரையாடல்கள் வசனமாகவும், பாட்டாகவும் அமையும் பாட்டு நடையே
பழைய வழக்காகும். அதன்வசன நடையும் இசையொடு கூடியே வழங்கும்.
அங்ஙனம் உரையாடல்கள் பாட்டு நடையாக நடைபெறுமிடத்து அப்பாடல்கள்
பண்ணொடும் தாளத்தொடும்  நிகழ்தலின் அவற்றிற்குப் பக்கத் துணையாக
யாழும்,முடிவும், கஞ்சக்கருவியும் அமைந்தன. சிலபோது கருவி
வாச்சியங்களின் வாயிலாகவும் நாடகமாந்தர்களின் உணர்ச்சிகள்
வெளிப்படுத்துவர்.

     எனவே நாடக உரையாடலுக்கு இன்றியமையாதனவாக இசைக் கருவிகள்
அமைந்தன. கைத்தாளம் அடித்தாளங்களுக்குத் துணையாகக் கஞ்சக் கருவியும்
தோல் கருவியும் அமைந்தனவாகும்.

இசை நாடகம்

     உரைநடை,  வினையம், நடிப்பு ஆகியவைகளின்றி இசைக்
கருவிகளோடு பாடற் சொற்களின் மெய்ப்பாட்டுணர்வு தோன்றக் கதை
நிகழ்ச்சிகளைப் பாடிக் கேட்போருக்கு உணர்த்தலும் இடையிடையே
உரைகளை இசையொடு பேசியும் விளக்குவது இசை நாடகமாகும், இவ் இசை
நாடகமே பின்னர் அரிகதை-சிவகதை பற்றிய கதாகாலட்சேபக் கலையாக
உருப்பெற்றதெனத் தெரிகின்றது.