25

     தமிழ் நாடக நூல்கள் என்று சொல்லத்தக்க அளவில் இவ்இருபதாம்
நூற்றாண்டில் தான் சிலநூல்கள் தோன்றி வந்துள்ளன. இவை
பெரும்பான்மையும் மேலைநாட்டவர் தொடர்பு, கலப்புஆகியவற்றான்
விளைந்த விளைவாகும். எனினும் தொடக்க காலத்தில் மேடைநாடகங்கள்
சிறிதளவு வசனங்களுடன் பேரளவிற்கு பாடல்களைக் கொண்டே அமைந்தன.
வாரஇதழ் திங்களிதழ் பெருகத்தொடங்கிய நிலையாலும் கற்றறிந்த அறிஞர்
சிலர் நாடகக்கலையை வளர்க்க வசனநாடகங்களை எழுதிவந்தமையாலும்,
மேலைநாட்டு நாடகப் பாணியில் சிலபல தமிழ் நாடக நூல்கள் தோன்றி
வழங்குகின்றன.

     பதினாறு பதினேழாம் நூற்றாண்டுகளில் கூத்து என்ற முறையில்
பாரம்பரியமாகச் சிலர் புராண இதிகாசக் கதைகளையும் அவற்றின் கிளைக்
கதைகளையும் தோரியம் பாடுவோர் துணையோடு நடத்திவந்தனர்
அரிச்சந்திர நாடகம், இரணிய நாடகம், சிறுத்தொண்டர் நாடகம் முதலியவை
அம்முறையில் நடந்து வந்தன தொழில் முறையில மேற்கொண்ட சில
குழுவினர் திரை, பின்னணி அமைப்புக்களோடு, இராமாயணம் துரோபதை
வஸ்திராகரணம், தசாவதாரம், கிருஷ்ணலீலா முதலிய புராண நாடகங்களையும்
நல்லதங்காள், சராங்கதரன் போன்ற புனைவு நாடகங்களையும், டம்பாச்சாரி
சதிலீலாவதி, பதிபக்தி போன்ற சமூக நாடகங்களையும் நடித்து வந்தனர்.
இவர்களால் தமிழ்நாடகக்கலை ஓரளவு பேணப்பட்டு வந்தது. ஆங்கிலக்
கல்வி கற்ற சிலர் அமெச்சூர் நாடகக்குழு என்றமுறையில் அமைந்து
கொண்டு மேலை நாட்டுப் பாணியைத் தழுவி வசன நடையில் நாடகம்
நிகழ்த்திவந்தனர். சங்கரதாசு சுவாமிகள் போன்றவர்கள் பாட்டு நடையிலும்
பம்மல்சம்பந்த முதலியார் போன்றவர்கள் வசன நடையிலும் பல நாடகங்களை
எழுதிப் படைத்தனர். திரைப்படக்கலை தாக்கத்தால் நாடகக்கலை வளர்ச்சி
பின்னடைந்திருப்பினும் திரைப்படக் கலைஞர் சிலரால் நாடகங்கள் நடந்து
வருகின்றன.

இராமநாடகம்

     சீகாழி அருணாச்சலக் கவிராயரால் 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில்
இயற்றப்பெற்று பத்தொன்பதாம் நூற்றாண்டில் பெரு வழக்கிலிருந்த
இராமநாடகம் இயற்றமிழ்ச் செய்யுள் வகையைச் சேர்ந்த பல்வகை
விருத்தப்பாக்களைத் தொடக்கமாகக் கொண்டு தமிழிசைப் பாட்டுக்களால்
காவிய முறையில் அமைக்கப் பெற்றதாகும்.

     இந்நூல் அமைப்பு முறையினால் இது நாடகத் தமிழ்நூல் என்று
சொல்வதற்கும் தமிழ் நாடாகநூல் என்று சொல்வதற்கும் ஏற்புடையதாக
அமைந்துள்ளது. எனினும் இவ் ஆசிரியர் இதனை இராம நாடகக்கீர்த்தனை
என்றே குறிப்பிடுகின்றார் இதனை முழுமையாக மேடை நாடகமாக
நடிப்பதற்குரியதாகக் கொள்ளுதற்கியலாது. நாடகப் பாத்திரங்களின்
கூற்றுக்களே மிக்கும் ஆசிரியர் கூற்று ஓரளவும் கொண்டிருப்பதால் இது நாடக
இலக்கியமே என்று கொள்ளவும் இயலாது. நூலமைப்பினை நன்கு நோக்கின்
மேடைநாடகத்திற்குப் பெரிதும் பயன்படுவகையில் அமைந்துள்ளமை
காணலாம். அந்நிலையில் அரிகதை முறையில் மேடைப்பிரசங்கம்
செய்வார்க்கும் பயன்படும் முறையிலும் அமைந்துள்ளமை காணலாம். இவ்வாறு
அமைத்ததன் நோக்கம்