26

இவர்காலத்தில் மராட்டிய அரிகதைப் பாணியில் தெலுங்கிலும் தமிழிலும்
புராண இதிகாசக்கதைகள் சரித்திர ரூபமாகக் கீர்த்தனைகளாலும் இசையோடு
கூடிய வசனங்களாலும் காலசேட்ப முறையில் குறுநிலமன்னர்களின்
அவைகளிலும் செல்வர்கள் தம் இல்லங்களிலும் நடைபெற்று வந்தமையும்
கற்றோர் கல்லாதார் ஆகிய யாவராலும் போற்றப் பெற்று வந்தமையுமே
என்பது இவர் வரலாற்றான் அறியமுடிகின்றது.

     இக்கவிராயருடைய காலத்திற்கும் இவ் இராமநாடகக் கீர்த்தனை
நூலுக்கும் முன்தமிழில் கீர்த்தனை வடிவில் நாடக நூல்கள் தமிழில்
இருந்ததாகத் தெரியவில்லை. பின்னர் எழுந்தசரித்திரக் கீர்த்தனை நூல்கள்
யாவற்றிற்கும் இராமநாடகக் கீர்த்தனை நூலே முன்னோடியாகவும் முதல்
நூலாகவும் திகழ்கின்றது. இவர் காலத்தில் தெலுங்கு மொழியில்
இவ்வமைப்புடைய சிலநூல்கள் தோன்றியுள்ளன. இவர் தமிழ் இலக்கண
இலக்கியங்களை நன்கு கற்றுத்தேர்ந்து பெரும்புலமைபெற்றுக் கவிபுனையும்
ஆற்றலும் கைவரப் பெற்றிருந்தமையான் அக்கால மக்களின் கல்விநிலை
சுவையுணர்வு ஆகியவற்றிற்கேற்ப இசைப்பாடல் நடையில் ஒருநூலைச்
செய்யவிரும்பி இசைவாணர்களின் துணையால் ஓரளவு இசையறிவும் தாள
அமைப்பும் கைவரப்பெற்று இந்நூலைச் செய்துள்ளார். இதனைச் செப்பமாகச்
செய்ய விரும்பினமையால் தெலுங்கு மொழியில் இவ்வாறாக அமைந்த
நூல்களையும் கீர்த்தனைகளையும் நன்கு தெரிந்து கொள்ளும் வேட்கையான்
இவர் வடமொழியையும் தெலுங்கு மொழியையும் போதுமான அளவிற்குக்
கற்றுத் தேர்ந்தார். என்பது இவர்வரலாற்றான் அறியக்கிடக்கின்றது.

     கதாகாலட்சேப முறையில் நூலியற்ற முற்பட்டபோது எந்தக் கதையை
மேற்கொள்வது என்று ஆராயுமிடத்து இவரைப் பெரிதும் கவர்ந்தது
இராமாயணக் கதையே என்பது புலனாகின்றது. இராமாயண நூல்களுள்
முத்தமிழ்ப் புலமையும் ஒருங்குருவது கம்பராமாயணமே எனத்
தேர்ந்தெடுத்துக் கொண்டார் எனத் தெரிகின்றது. மற்றும் கம்பராமயணம்
வைணவர் சைவர் எல்லோராலும் விரும்பிப் பயிலப்பட்டு வரும் நூலாக
இருத்தலான். தான் சைவ மரபில் வந்து சைவத்தில் ஊன்றிய
கொள்கையுடையவராக இருந்தும் இந்த இராமநாடகத்தைச் செய்ய முற்பட்டார்
எனக் கொள்ளலாம்.

     காலட்சேபத்திற்குரிய முறையில் தன் நூலைப் படைக்க முற்பட்டு
அந்நூலை ஆழ்ந்து பயிலப்பயில அதன்கண் அமைந்துள்ள நாடகப் பாங்கு
இவர் சிந்தையைக் கவர்ந்தது போலும் இராம சரிதக்கீர்த்தனை இயற்ற
எண்ணியவர் கீர்த்தனை வடிவில் இராமாயணத்தை நாடகமாகவே
செய்தனராதல்வேண்டும். அதனால் இராமாயணத்தில் நாடகக் கூறுகள்
மிக்கமைந்த பகுதிகளை மட்டும் தேர்ந்து. இராமநாடகக் கீர்த்தனை என்ற
பெயரில் இந்நூலை யாத்துள்ளார் இவர் வடமொழி வான்மீக
ராமாயணத்தையும், தெலுங்கு இராமாயணத்தையும் அறிந்தவராயினும் தமது
நூலுக்கு முதல் நூலாகக் கம்பராமாயணத்தையே முழுமையாக எடுத்துக்
கொண்டுள்ளார். கதையமைப்பை மட்டுமன்றிக்காண்டப்படலமாகிய
வரிசைகளையும் அப்படியே மேற்கொண்டுள்ளார்.

நூலமைப்பு

     கம்பராமாயணத்தை முழுதும் பின்பற்றியமையால் கவிராயர் தமது
நூலையும் ஆறு