28 என்ற முறையில் அமைந்துள்ளன. ஓரிரு இடங்களில் அநுபல்லவியின்றிச் சரணங்கள் அமைந்துள்ளன. பெரும்பாலும் சரணங்கள் மூன்றற்குக் குறையாமல் எட்டு வரையும் அமைந்துள்ளன. திபதை என்னும் இரண்டடிகளாலான இசைக் கண்ணிகள் நான்கு முதல் பதினெட்டு வரையிலும் அமைந்துள்ளன. மூலபல சண்டை என்னும் கீர்த்தனையின் பல்லவி முழுதும் முற்று மோனையாகவும், மிக நீண்ட சரணங்களைக்கொண்டும் முந்நூற்று முப்பத்தெட்டு அடிகளைக் கொண்டதாகச் சிறந்த காப்பிய வருணனைப் பாங்குடன் அமைந்துள்ளது. இசை முத்தமிழுள் நடுவணதாக நின்று இருதலையும் எய்தும் இசை தெய்வத்தன்மை பொருந்தியதொரு அரியகலையாகும் தேசந்தொறும் இசையை இசைக்கும் முறை வேறுபடினும் அடிப்படையான சுரங்கள் எல்லாத் தேசத்திற்கும் மொழிக்கும் பொதுவானவையே பாரத தேசத்தின் தென்பகுதியில் வழங்கி வரும் இசைக்குக் கருநாடக இசை எனப் பெயர் பெறும். தமிழிசை எனினும் கருநாடக இசை எனினும் ஒக்கும்தமிழிசை என்பது மொழியடிப் படையிலும் கருநாடக இசை என்பது நாட்டின் அடிப்படையிலும் அமைந்த பெயர்களாகும். தமிழகமாக இருந்த தென்னகம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளாகத் திரிந்தபின் தமிழிசை என்பது தமிழுக்கே உரியது என்னும் பொருளைத் தருதலின் தென்னகத்தின்பொதுப் பெயராகக் கருநாடகம் என்பதனை மேற்கொண்டு கருநாடக இசை என வழங்கி வருகின்றனர். கருநாடு என்பதற்கு மூலநாடு பழையநாடு என்பது பொருள் தொன்மையான நாடு என்பது பழந்தமிழ்க்குமரி நாட்டைக் குறிப்பதாகத் தெரிகிறது. குமரிநாடு ஏழு ஏழு பகுதிகளைக் கொண்ட ஏழு நாடுகளைக் கொண்டது என அடியார்க்கு நல்லார் கூறுகின்றார் அவற்றுள் ஒன்று ஏழ் குணகாரை நாடென்பது அது இன்றைக்குள்ள தென்தமிழ் நாட்டிற்கும் இலங்கைக்கும் கிழக்கே அமைந்திருந்ததொரு நிலப்பரப்பாகும். அதனுடைய எச்சமாக இன்றைக்கும் இருப்பது யாழ்பாணத்தை அடுத்துள்ள காரைத்தீவாகும். அந்நாட்டில் இசை வல்லுநர்கள் மிக்கு வாழ்ந்தனராதல் வேண்டும் அவருள்யாழிசை வல்ல பாணர்கள் வாழ்ந்த நாடே இன்றைக்குச் சுருங்கிக் கிடக்கின்ற யாழ்ப்பாணமாகும். காரைத் தீவையும் யாழ்ப்பாணத்தையும் உள்ளடக்கிய கிழக்குக் கரைநாடே சூரிய ஒளியால் அழகுற்றுப் பொன்னாடாகத் திகழ்ந்தமையின் அதற்குப் பொன் என்ற பொருளைத் தரும் லங்கா(இலங்கை) என வடவராற் பெயர் சுட்டப்பட்டது போலும் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்தவராகக் கூறப்பெறும் வான்மீகிமுனிவர் இலங்கையை ஆண்டமன்னன் பேராற்றுலுடைய இராவணன் என்னும் அரக்கன் என்றும் அவன் ஓர் இசைமேதை என்றும் குறிப்பிடுகின்றார். அவனுடைய இசைக்கலை அபிமானத்தைக் குறிப்பதாகவே அவனது. கொடி வீணைக்கொடியாக அமைந்துள்ளதை உணரலாம். அவனுடைய பேராற்றலையும் இசைஞானத்தையும் தெளிவாக உணர்த்தும் முறையில் தான் அவன் கயிலாய மலையைப்பெயர்த்தெடுத்ததும் இறைவன் தன்பாதத்தால் மலையையழுத்தியதும் அதனின்றும் தப்பி வெளிப்பட நாரதரின் அறிவுரை கேட்டுச் சாமகானம் பாடினான் என்பதும் அதுகேட்டு இறைவன் மனமுருகி அழுத்தியிருந்த காலை மெல்லத் |