29 தூக்கி விடுத்தான் என்னும் கதைவரலாறும் அமைந்துள்ளது. இராவணன் அக்காலை இசைத்த பண்ணேசங்கராபரணம் என உருவாகி வழங்குகின்றது என்பர். மேலும் இராவணன் ஏழிசை வல்லமையால் உற்றிருந்த செருக்கினை அகத்தியர் கந்தருவ இசையால்வென்று அடக்கினார் என்னும் கதைவரலாறும் அவனது இசை ஞானத்தை வற்புறுத்த எழுந்ததேயாகும். எனவே வால்மீகியின் காலத்தில் தென்னாடு இசைக்கலையில் ஓங்கி இருந்ததென்பதும் அதுவே கருநாடக இசை என்னும் தமிழிசை என்பதும் புலப்படும். மேலும் ஒருகதை, அனுமார் ஒரு பொழுது ஒருகுன்றின்மீதமர்ந்து இராமநாம கீர்த்தனம் செய் கொண்டிருந்தபோது அவ்விசையில் மயங்கிய நாரதர் அனுமனிடம் சென்று பாராட்ட அவன் நாரதர் வைத்திருந்த சுருதி வீணையைச்சுட்டி இது எதற்காக என்றுவினவ நாரதர் இசைப்பதற்கு இது துணைக்கருவி என்று கூற அதன் துணையின்றிச் சுருதிபிறழாமல் பாடஇயையாதோ என்று அனுமான் கேட்க நாரதர் இயலாதென்று கூற அதனை மறுத்து அச்சுருதி வீணையை வாங்கிப்பாறையில் வைத்துவிட்டுப் பாடிக்காட்டினார் என்றும் அவ்இசையில் மெய்மயங்கியிருந்த நாரதர் அனுமான் பாடிமுடிந்தபின் வீணையை எடுக்க அது எடுக்க முடியாமல் பாறையில் அது ஒட்டிக்கொண்டு இருந்தமை கண்டு நாரதர் வியந்தார். அப்பொழுது அனுமான் தூய உயர்ந்த இசைக்குக் கல்லும் இளகும் ஆதலின் நீஒரு பாடலை இசைத்துப் பாறையை இளக்கி வீணையை எடுத்துக்கொள் என்றார். நாரதர் ஆற்றலையெல்லாங் கூட்டி உருக்கமாகப்பாடியும் பாறை இளகவில்லை. நாரதர் தன் செருக்கடங்கி வீணையை மீண்டும் எடுத்தளிக்க வேண்டியபொழுது அனுமான் தேவகானம்பாடி அதை மீட்டுத்தந்தார்.அனுமான் அன்று இசைத்த பண்ணிசையே இன்று அனுமந்ததோடி அல்லது அநுமத்தோடி என்று வழங்கிவருகிறது என்பதாகும். இக்கதை உணர்த்தும் மெய்ம்மையும் தமிழகத்தில் ஒப்பற்ற இசைக்கலை மிகப்பழங்காலந்தொட்டே வழங்கி வருகின்றது என்பதாகும். எனவே இன்றைய கருநாடக இசைஎன்பது பழந்தமிழிசையே என்பது நன்கு புலனாகும். கருநாடக இசை தென்னாட்டுத் தமிழிசையே என்பதற்கு அதன் ஆளத்தி முறையைத் தென்னாதெனா எனவழங்குவதும் தென்னாட்டுப் பாணியைத் தென்பாங்கு (தெம்மாங்கு) எனச்சுட்டுவதும் சான்றுகளாகும். இன்றைக்கும் பழமையான தொன்றைச் சுட்டுமிடத்துக் கருநாடகம் என்ற சொல்லை மக்கள் கையாளுவதைக் காணலாம். தமிழிசை சங்ககாலத்திற்குப் பின் களப்பிரராட்சியில் ஒடுங்கிப் பின் சம்பந்தர்காலத்தில் தலையெடுத்து வளரலாயிற்று. தனித்த இசையிலக்கண நூல்கள் யாவும் எட்டாம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டவையே. சங்க காலத்திற்கு முன் பல இசைஇலக்கண நூல்கள் இருந்ததென்பதைச் சிலப்பதிகாரப் பழைய உரையாசிரியரும் அடியார்க்கு நல்லாரும் எடுத்துக்காட்டுகின்றனர். தொல்காப்பியம் நிலஇயல்பு அடிப்படையில் ஒழுகலாறுகளைக் கூறுமிடத்து நானிலத்திற்கும் உரியவாகக் கூறும் பண்ணும்யாழும் குறிப்பிடுங்கால் குறிஞ்சி, முல்லை, மருதம், பாலை ஆகியபண்களை யாழொடு கூட்டிக்கூறுகின்றது. புறஒழுக்கத்தில் படையியங்கரவம் போர்ப்பாடலை உணர்த்துகின்றது. திணைமாந்தர்களுள் பாணர் பாடினி, விறலி, பொருநர், கூத்தர் முதலாய இசைநாடகக் கலைஞர்களை குறிப்பிடு |