30 கின்றது, செய்யுளியலுள் நால்வகைப் பாக்களுக்கு ஓசை கூறிப் பரிபாடலுக்குப் பண்ணமைப்புண்டு என்கிறது. பண்ணும் தாளமும் அமையவரும் பண்ணத்தி எண்பதொரு பாடல் வகையைக் கூறுகின்றது. அகத்திணை இலக்கியம் உலகியல் வழக்கையும் நாடக வழக்கினையும் கொண்டியற்றப்படுவது கொச்சகக்கலி வகையுள் தேவபாணி என்றொரு வகை கூறுகின்றது. கலிப்பாவின் உறுப்பாக தரவு, தாழீசை, அம்போதரங்கம், தனிச்சொல், சுரிதம், அராகம் என அமையும் என்கிறது. இவற்றுள் தரவு பல்லவியைப் போன்றதொரு அமைப்பாகும். தாழிசை தனித்தும் மூன்றாக அடுக்கியும் வரும். அராகம் முடுகு நடையுடையது மரபியலுள் பாடலுக்குரிய இருபது வண்ணங்களைக் கூறுகின்றது. நாடகத்தமிழ் இலக்கியமாகிய சிலப்பதிகாரத்தில் பல்வகை வரிப்பாடல்களும் குரவைப்பாடல்களும் அமைந்துள்ளன. இவை மூன்றடுக்கி வரும் இயல்பின இசைப்பாடல்கள் பல்லவி, அநுபல்லவி, சரணம் எனப் பிற்காலத்து அமைந்து வந்த மரபிற்கு அவையே அடிப்படையாக உள்ளன. இசைப் பாடல்களுக்கும் பண்ணிசைகளுக்கும் மூலமாக அமைந்தவை நாட்டுப்புறப் பாடல்களேயாகும். அவை காலந்தொறும் மக்கள் நாகரிகத்திற்கும் சுவைக்கும் ஏற்ப வளர்ந்துள்ளன. கருநாடக இசை இலக்கிய வடிவங்கள் பயிற்சி கருதி வர்ணம், அலங்காரம், சுரசதி, சதிசுரம்,பதம், கீர்த்தனை முதலிய வடிவங்களைக் கொண்டுள்ளன. இன்றைய கருநாடக இசைப்பாக்களின் வடிவங்கள் ஏறத்தாழ 15ஆம் நூற்றாண்டிற்கால் கொண்டு 16, 17, 18 ஆம் நூற்றாண்டுகளில் செம்மை பெற்றனவாகும். தெலுங்கிலும், கன்னடத்திலும் சாகித்தியங்கள் இசை ஞானியர் சிலரால்தோற்றம் பெற்றன. அம்முறையில் தமிழில் இன்றைக்குள்ளனவற்றுள் காலத்தால் முற்பட்டவைசீகாழி முத்துத்தாண்டவர் கீர்த்தனைகளாகும் அவர் இயற்றிய நெறிமுறைகளைப் பின்பற்றியே பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த தில்லைவிடங்கன் மாரிமுத்தாப்பிள்ளையும், சீகாழி அருணாசலக் கவிராயரும் தங்களின் இசைப்பாடல்களை அமைத்துள்ளனர் எனலாம். அருணாசலக் கவிராயர் இயற்றமிழ்ப் புலமையும் உடைய வராதலின் தனித்தனிக் கீர்த்தனைகள் புனைவதில் முனையாமல்காப்பிய முறையில் தொடர்ச்சியான கீர்த்தனைகளை இயற்ற முற்பட்டுத் தனது நூலை இயற்றியுள்ளார்(இவர் பாடியனவாகக் கிடைத்துள்ள தனிக் கீர்த்தனைகளை இவர் வரலாற்றிற் காண்க) நாடகபாணியில் கதை தழுவிச் செய்யப்படும் இவரது கீர்த்தனைகளுக்குச் சுரக்கோவையமைப்பினை விடதாள லயத்திற்கே முதலிடம் கொடுத்துள்ளார் நாடகக் கீர்த்தனை என்ற வகையில் இவருடைய நூலேஇன்று வரை இணையற்றதாக விளங்குகின்றது. யாப்பமைதி இராமநாடக அமைப்பில் கீர்த்தனைகளோடு திபதை, தோடயம், விருத்தம், வெண்பா, கலித்துறை,கொச்சகம் ஆகியவை இடம் பெற்றுள்ளன என்பது மேலே குறிப்பிடப்பட்டது. அவற்றின் இலக்கண அமைப்பினை ஈண்டுச் சுருக்கமாகக் குறிப்பிடுகின்றேன். |