32 நாமசங்கீர்த்தனத்தை நாமாவலி என்றுக்கூறுவர் (கீர்த்தி=மிகுபுகழ் அப்புகழை உடையதுகீர்த்தனை) கீர் என்பது சொல் என்னும் பொருள் தருவதோர் உரிச்சொல் இது பல்லவி, அநுபல்லவி, சரணம் என்னும் உறுப்புக்களை கொண்டு நடைபெறும் இடையே முடுகு நடையும் அமைவதுண்டு பல்லவியை எடுப்பென்றும், அநுபல்லவியைத் தொடுப்பென்றும் சரணத்தை முடிப்பு என்றும் கூறுவர்.முதனிலை, இடைநிலை, இறுதிநிலை என்றும் கூறுவர் ஒரு கருத்தின் முடிந்த முடிவைச் சுருக்கிமுன்மொழிவது பல்லவி அதற்கு விளக்கந் தருவது அநுபல்லவி அதன் காரணத்தை விளக்குவது சரணம். சரணம் ஒன்றும் சிலவும் பலவுமாக கவரும் கீர்த்தனை மோனை எதுகைத் தொடை நயமும் சிறப்பாக வழிஏதுகைத் தொடையும் இயைபுத் தொடையும் கொண்டு நிகழும் இயைபுத் தொடை சீர்களாக அமையின்சிறக்கும் இக்காலத்து வேறுசில பொருள் பற்றியும் கீர்த்தனைகள் தோன்றியுள்ளன. தரு கீர்த்தனைக்குரிய கூறுகள் யாவும் நிரம்பி ஒரு நிகழ்ச்சியையோ, பொருளையோ, கதைப்பகுதிகளையோ பொருளாகக் கொண்டு நாட்டிய நாடகத்திலும் பொரு நாடகத்திலும் வரும் இசைப்பாடல் தரு எனப்படும். தரு என்பது தோரியம் என்னும் சொல்லின் மரூஉப் பெயர் எனத்தெரிகின்றது. தோரியம் என்பது நாட்டியம் ஆடுபவர் பொருந நாடகத்தில் நடிப்பவர் பாடும் பாடலைப் பின்னிருந்து வாங்கிப்பாடுதல் என்னும் பொருளுடையது. இதனை “வாரம்பாடும்தோரியமடந்தையர்” என்னும் சிலப்பதிகார அடியால் உணரலாம், தோரியம் என்பதனுள் (தொரு)தோர் என்பது பாடலையும் இயம் என்பது இசையையும் குறிக்கும். தோர் என்பதற்குத் தொடையமைந்தபாடல் என்பது பொருள் என்பதைத் தோரணம், தோரணகம்பம் என்னும் சொற்களால் அறியலாம். இனிநாடக, நாட்டியக் காட்சிகளைத் தந்து முன்னிற்றலின் தரவு என்பதன் திரிபு தருவாயிற்று என்றும் கருதலாம். கலிப்பாவின் முன்னிற்கு உறுப்பிற்குத் தரவு என்பது பெயர்! தந்து முன்னிற்றலின்தரவு, என்பார் யாப்பருங்கல உரையாசிரியர். எனினும் முன்னதே வலியுடையதாகத் தெரிகின்றது. திபதை இது தவி-பத என்பதன் தமிழாக்கமாகும். துவி=இரண்டு-பத=பாதம்-அடி இரண்டிரண்டு அடிகளைக்கொண்டு நடைபெறும். இசைப்பாடல் என்பது இதன்பொருள் இரண்டு இரண்டு மலர்களை வைத்துத்தொடுக்கும் மாலைக்குக் கண்ணி என்பது பெயராதலின் திபதையைக் கண்ணி என்று வழங்குவர். கண் இரண்டாதலின் கண்போல இரண்டடிகளைக் கொண்ட பாடல் கண்ணி எனலாயிற்று எனினும் ஒக்கும். |