48 வெட்டுக்களம் கண்டு முதுகையிடலாமோ உலகிலே நன்மைசெய்ய இடையூறு மெத்தவரும் காலம் போகும் வார்த்தை நிற்கும் மலைவிழுந்தாலும் தலையே தாங்க வேணும் திபதை 8 உடுத்த புடவைதானே பாம்பாய்க் கடித்ததுபோல வேலிக்கு முள்ளிட என்காலுக்கு முள்ளாகவந்தது பிள்ளையின் மடிமீது பெற்றவன் சீவன்விட்டால் பெருங்கதி உண்டு ” 9 குளிக்கப் போயும் சேறுபூசிக் கொள்ளலாமோ ஆனை ஏறியும் திட்டிவாசல் நுழைவானேன் முதல் கோணல் முட்டக் கோணும் ” 10 எழுதாப் பொறிக்கு அழுதால் என்னதான்வரும் தரு 13 தின்றாலல்லோ நஞ்சு கொல்லும் ஓராயிரம் நட்சத்திரம் ஒரு சந்திரனாமோ திபதை 11 கண்ணுக்குற்றம் கண்ணுக்குத் தெரியாது ” 12 இடறின காலிலே இடறும் மலைதாங்கும் பாரத்தை மண்ணாங்கட்டி தாங்குமோ தன்னினம் தன்னைக் காக்கும் வேலி பயிரைக்காக்கும் தரு 18 மழைவிட்டும் தூவானம் விடவில்லை ஆரணியகாண்டம் தரு 1 தாயறியும் பிள்ளையை தாயையும் பிள்ளைஅறியும் தாய்கண்டு பொறுக்காததை ஊரோ கண்டுபொறுக்கும் திபதை 2 பஞ்சு பறந்தாலும் படியும் ஒருதேசம் ” 3 பொன்னின் குடத்துக்குப் பொட்டிட்டுப் பார்க்க வேணுமோ ” 4 கும்பிடப் போனதெய்வம் எதிரேவந்தது (போல) தன்வீட்டு விளக்கென்று முத்தம் கொடுப்பாருண்டோ ஊர்க்குருவி உயரப்பறந்தாலும் கருடனாமோ உன்னைக் கிள்ளுக்கீரையா நினைத்தான் |