52

தரு 48      உள்ளங்கையிலே முடிக்கிறேன்பார் ஒன்பது கொண்டை
குளப்படி கண்டு திரைகடல் ஏங்குமோ

” 50        கரும்புக்கு உழுதபுழுதி காய்ச்சின பாலுக்குச் சர்க்கரை ஆமோ

” 51         முன்னாள் சண்டை ஒருபாக்கும் இந்நாள் சண்டை ஒரு
                                     தோப்புமாகும்

” 54        விழலுக்கு இறைத்த நீராச்சே

” 55        தலைக்குமேல் ஓடினவெள்ளம் சாண்ஓடினாலென்ன முழம்
                                   ஓடினாலென்ன

” 57        நெருப்பைப் புழுபற்றுமோ

” 61         நீருள்ள மட்டுமே மீன்துள்ளும்

” 62        நாய்க்கு முழுத்தோல் பொறுக்குமோ
அடங்காப் பாம்பிற்கு ராசா மூங்கில் தடியாம்

” 63        தம்பி பிறக்கத் தறை மட்டமாச்சு என்பதுபோல

” 67        பெண்ணாலே கெட்டகுடியாப் பண்ணிவிட்டானே

” 68        முட்டாளும்கூட உன்னைச் சட்டை செய்வானோ
முடுக்கில் இருந்து கொண்டு துடிக்கிறாய்
பிடித்த கத்தியை உறையில் அடக்கவேணும்
பெண்மேற் கத்தி எடுத்த மன்னவர் எங்குமில்லை

” 69        காலிலே சுற்றிய பாம்பு கடித்தாலொழியப் போமோ

” 70        பனிப்பெருக்கிலே கப்பலோட்ட நினைக்கிறாய்
குரங்குப் பிடியே பிடிக்கிறாய்

” 71         படைக்குப் பயந்து செடிக்குள்ளே பதுங்கிறீர்
பிராணன் போனாலென்ன மானம் போகலாமோ

திபதை 14    கள்ளனுக்குக் கூவென்றவன் மேல்பகை போலே
துள்ளின மாடு பொதிசுமக்கும்

” 15         சீதை பிறக்க லங்கை அழிந்துபோம்

தரு 84      பாலும் பதக்கு மோரும் பதக்கு என்று எண்ணலாமோ