53 திபதை 16 முக்காடிட்டபிள்ளை முன்னின்ற பிள்ளையையல்லாமல் முதற்குட்டின பிள்ளையை அறியாதே கயிற்றைப் பாம்பென்றெண்ணிக் கலங்குதலாமோ வாய்புளித்ததோ மாங்காய் புளித்ததோ தரு 85 தோளிலே இருந்து செவியைக் கடித்தாற் போல திருக்கண்ட கண்ணுக்குத் தீங்குண்டோ திபதை 17 குசவனுக்குப் பலநாள்வேலை தடிகாரனுக்கு அரைக்ஷணம் போல ” 18 வரும்விதிவந்த தென்றால் படும்விதி படவேணும் இரண்டாட்டில் ஊட்டின குட்டி போலானேனே தரு 90 பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லு ” 91 நெருப்பிலே போட்டாலும் வேமோ என்னெஞ்சம் பலதீட்டுக்கு முழுக்கொன்று ” 96 அணுவும் மலையாச்சு அந்தமலையும் அணுவாச்சு திபதை 19 நச்சு மரமானாலும் வைச்சவர் நன்றென்று குறியாரே எங்கே இருந்தாலும் ராமர் இருக்குமிடம் அயோத்தி தானே ஆனை தழுவும் கையாலே ஆடு தழுவுமோ ----- பாவபுண்ணியங்கள் இந்நாடக நூலுள் ஆங்காங்கே மக்களுக்குரிய தர்மங்களும் நீதிகளும் அவர்கள் தவிர்க்கவேண்டி பாவங்களும் பற்றிக் கூறுகின்றார். அவற்றுள் இரண்டு கீர்த்தனைகள் முழுதும் நரககதியும், தோஷமும் (பாவம்) பற்றிய விளக்கமாக அமைந்துள்ளமையின் அவற்றை மட்டும் ஈண்டுக் குறிப்பிடுகின்றேன். இவற்றுள் பெரும் பாலானவை கம்பராமாயணப் பாடல்களில் அமைந்தவையேஎனினும் அவற்றைத் தொகுத்துக் கீர்த்தனையில் நிரல்படுத்தி இவ்வாசிரியர் கூறும் முறைபோற்றத் தக்கதாகும். |