55 ஆறு குளத்தில் அம்மணமாக நடந்தவன் எய்தும் நரகம் அன்னை தந்தை குரு வார்த்தையைக் கடந்தவன் ” நல்லோர் பெரியோர்களைக் கண்டு எழாமல் கிடந்தவன் ” திருடனுக்கு இடங்கொடுத்தவன் ” ” கொடுத்தவன் பின்னே தொடர்ந்தவன் ” வேறு இல்லாரைப் பகைத்து விண்டவன் ” வேட்ட கந்தன்னிலே இருந்துண்டவன் ” சீறும்படையைப் பயந்து கண்டவன் ” செடியிலே தலை துறுத்துக் கொண்டவன் ” ------ சேதுவைக் காணத் தீரும் தோஷங்கள் யுத்தகாண்டம் தரு 87 தந்தை, தாய், குரு, தெய்வ நிந்தனை தஞ்சம் வந்தவரைக் கெஞ்ச அடித்தல் ஆகுதிகளை அழித்தல் அந்தணரைக் கொல்லுதல், பசுவைக் கொல்லுதல் மைந்தர்களைக் கொல்லுதல் அன்னமிட்டவரிடம் கன்னமிடுதல், கள்ளைக் குடித்தல் ஆவுறிஞ்சு தறியை இடித்தல் சந்தி விருட்சங்களை ஒடித்தல் பிறர் பெண்களை வலியப் பிடித்தல் நொந்தவர் பொருளை அபகரித்தல் நடுவில் நோன்புகளை விடுதல் வந்த பிறர் பசிக்க உண்ணுதல் ஆடைநழுவும் பெண்டிரைக் காணுதல் கேடு செய்பவரோடு உறவாடுதல் வழக்கு ஓரம் சொல்லுதல் இரவில் வீடுகளுக்கு நெருப்பிடுதல் |