64

ஓரம்பால் கொன்று சுக்கிரீவனுக்கு ஆட்சியை அளித்தவன். அகத்திய
முனிவரிடம் வில்லும் வரமும்பெற்றவன். சீதை இலங்கையில்
சிறைப்பட்டிருப்பதை அனுமானால் அறிந்து கடலைக் கடக்க வானர
சேனைகளைக் கொண்டு சேது என்னும் அணையைக் கட்டியவன் அப்போழுது
அடைக்கலமாக வந்த விபீடணனைஏற்று இலங்கைக்கு அரசனாகத் தம்பியைக்
கொண்டு முடிசூட்டியவன். முதல்நாள் போரில் கொன்றுசீதையை மீட்டு
உலகோர் ஐயம் நீங்க அவளைத் தீக்குளிக்கச் செய்து ஏற்றுக்கொண்டு
தசரதனைத்தேவ உருவிற் கண்டு மகிழ்ந்து வரம்பெற்று மீண்டுவந்து
பரதனைக்காத்து மகுடாபிஷேகம் செய்துஆட்சிப் பொறுப்பைப்
பரதனுக்களித்தவன். இராமன், ரகுராமன் இராகவன் தசரதராமன்
முதலானபெயர்களால் போற்றப் பெறுபவன் கதாநாயகன்.

பரதன்

     தசரதனின் இரண்டாவது மனைவி கைகேயிடம் பிறந்தவன் திருமாலின்
சக்கரத்தின்அவதாரமாகத் தோன்றியவன் கோசலையிடம் வளர்ந்தவன்
இராமனிடம் பேரன்பும் பக்தியும் பூண்டவன் கைகேயியின் வரத்தால் இராமன்
கானகம் ஏகத் தந்தை இறந்தமை கேட்டுத் தாயைக்கோபித்து வெறுத்தவன்
தனக்கிவ் வஞ்சம் தெரியாதென்று கோசலையிடம் சபதம் கூறி இராமனை
மீண்டும் அழைத்துவரப் பரிவாரங்களுடன் சென்று இராமனை அழைக்க
அவன் அறிவுரைகூறி அவன் விரும்பியாங்குத் தன் பாதுகைகளைத்
தரப்பாதுகைக்குப் பட்டம் செய்து தான் நகரத்திற்குள் புகாமலேயே
நந்திக்கிராமத்திலிருந்து நாட்டைக் காத்தவன் பதினான்கு ஆண்டுகள் முடிந்த
நாளன்று இராமன் வருகையைக் காணாமையால் தீக்குளிக்க முற்பட்டவன்
அனுமானுடைய வாய்மொழியால் தடைப்பட்டுப் பின் இராமன் வரக்கண்டு
பணிந்து மகிழ்ந்து மகுடாபிஷேகத்திற்கு ஆவன செய்துஇராமர்
பட்டாபிஷேகம் கண்டு மகிழ்ந்தவன் எண்ணில் கோடிராமர்கள் இவனுக்கு
ஈடாக மாட்டார்என்று கோசலையால் பாராட்டப் பெற்றவன்.

இலட்சுமணன்

    தசரதனின் மூன்றவாது மனைவியாகிய சுமித்திரையிடம் பிறந்தவன்
திருமாலின் படுக்கையாகிய ஆதிசேடனுடைய அவதாரம். இராமனுடன்
என்றும் இணைபிரியாதுறைந்தவன் இராமனுடன் வனவாசம் சென்றபோது
பதினான்கு ஆண்டுகளும் ஊன் உறக்கம் நீத்துக் காத்தவன். சூர்ப்பநகை
சீதையை அபகரித்துச் செல்ல முயன்றபோது அவளைத் தடுத்து சொற்கள்
காரணமாகப் பொன்மானைப் பிடிக்கச்சென்ற இராமனைக் காணச் சென்றவன்
மீண்டுவந்து சீதையைக் காணாமையால் வருந்தி இராமனைத்தேற்றித்
தேடமுற்பட்டவன் கிஷ்கிந்தையில் கார்காலம் கழிந்தும் சுக்ரீவன் வராமை
கண்டுசினந்து சென்று தாரையால் கோபம் தணிந்தவன் இலங்கையில்
நாகபாசத்தாலும் பிரம்மாஸ்திரத்தாலும் கட்டுண்டு கருடனாலும் சஞ்சீவியாலும்
மீண்டவன் இராவணன் மகன்இந்திரசித்துவின் நிகும்பலை யாகத்தைச்
சிதைத்து அவனோடு போரிட்டு அவன் தலையை வெட்டிஇராமனிடம்
சேர்த்தவன் இளையபெருமாள் என்று சிறப்பிக்கப் பெறுபவன்.