65

துசத்ருக்கணன் (சத்துருக்கன்)

    தசரதன் மனைவி சுமித்திரையிடம் இலக்குமணனுடன் உடன் பிறந்தவன்
திருமாலின் சங்குஅவதாரம். சீர்த்தமதியுடையவன் பரதனை என்றும்
பிரியாமல் அவனுடன் உறைபவன் பரதன் தீயில்மூழ்க முடிவுசெய்து ஆட்சிப்
பொறுப்பை ஏற்க வேண்டும்போது மனம் நொந்து மறுத்தவன் பரதனுக்கு
முன்னதாக இறக்க முற்பட்டவன்.

சுமந்திரன்

    தரசதனின் தலையாயமந்திரி இராமன் காடேகும் போதும் அவனைத்
தேரில் ஏற்றிச் சென்று நகரஎல்லையில் விட்டுப்பின் திரும்ப மனமில்லாது
வருந்திய போது இராமனால் அறிவுரை கூறப்பெற்றுவந்து தசரதனிடம்
செய்தியைச் சொன்னவன் மிக்க அரசப்பற்றுடையவன்.

சனகன்

    விதேகதேசத்து மிதிலை நாட்டரசன் அரசமுனிவன் கல்வி கேள்விகளிற்
சிறந்தவன். சீதையைமகளாக வளர்த்து இராமன் வில்லை முறித்த
வெற்றிகண்டு உவந்து சீதையை அவனுக்கு மணமுடித்துத்தந்தவன்.

உரோமபதன்

    அங்கதேசத்து அரசன் தசரதன் வேண்டக் கலைக்கோட்டு முனிவரை
அயோத்திக்கனுப்பிப்புத்திரகாமேட்டி யாகம் செய்வித்துத் தசரதனுக்கு
மக்கட்பேறருளியவன்.

குகன்

    சிருங்கிபேரம் என்னும் நாட்டிற்கு அரசன் வேடர்குலத்தில் தோன்றி
கங்கையில் படகுவிடும்செயலை மேற்கொண்டவன். இராமனிடத்தில்
எல்லையற்ற பக்தி கொண்டவன். பரிவாரங்களோடுவந்த பரதனை முதற்கண்
ஐயுற்றுச் சினந்து அவன்தன்மை கண்டுபின் பெரிதும் மகிழ்ந்து போற்றியவன்.
வனவாசம் முடிந்து வரும் இராமனைக் கண்டு மகிழ்ந்து பின்
பட்டாபிஷேகத்தில் கலந்து கொண்டவன்.

பரசுராமன்

    திருமாலின் அவதாரம் சமதக்கினி முனிவருக்கு இரேணுகையிடம்
நாலாவது மகனாகப் பிறந்தவன். தந்தையின் சொற்படி முதலில் தாயைக்
கொன்று அதற்காகத் தந்தையிடம் வரம்பெற்றுத் தாயை உயிர்ப்பித்தவன்.
பெருவீரன் தனுர்வேதத்தின் எல்லைக்கண்டவன். சத்திரியவமிசத்தை
இருபத்தொரு தலைமுறை வென்றழித்துப் பின் இராமனிடம் தோற்றுத்
தென்னாடு போந்துதவமியற்றியவன்.

இந்திரன்

    தேவர்களுக்கு அரசன் அகலிகையின் பொருட்டுக் கௌதம முனிவரால்
சபிக்கப்