66 பெற்றவன். காக்கை வடிவில் வந்து சீதையைத் தீண்டியமையின் இராமனது புல்லாயுதம் துரத்தமும் மூர்த்திகளும் அடைக்கலம் தராமையால் இராமனிடத்து சரணடைந்தவன். காகவடிவில் ஒரு கண்ணை இழந்தவன். இராவணனுடன் இராமன் போரிடச் சென்றபோது மாதலியிடம் தன் தேரை அனுப்பி இராமனுக்கு தேரோட்டியாக அவனைச் செய்தவன். இந்திரசித்துவிடம் தோற்று அரக்கர்களுக்கு அஞ்சிவாழ்ந்தவன். இராவண வதத்திற்குப்பின் உரிமை பெற்று ஆண்டவன். வருணன் மழைக்குத் தேவதை கடல்களின் அரசன் வருணசபம் செய்து இராமன் அழைக்கவும் வராதிருந்தமையின் இராமன் கோபத்திற்கு ஆளாகி மெலிந்து வந்து சரண்புகுந்து சேது அணைகட்டுதற்குதன் முதுகை இடமாகக் கொடுத்தவன். கருடன் திருமாலின் ஊர்தி. நாகங்களின் பகைவன். இலட்சுமணன் நாகபாசத்தால் கட்டுண்ட போதுவந்து அதனை நீக்கி அழித்து இராமனுடைய துயரத்தைத் தீர்த்தவன். இராமனைப் போற்றித் துதித்து மீண்டவன். வைணவர்களால் பெரிய திருவடி என்று வணங்கிப் போற்றப் பெறுபவன். மாதலி இந்திரனுடைய தேர்ச்சாரதி இராவண யுத்தத்தில் இராமனைத் தன் தேர்மீது ஏற்றிச்சாரத்தியம் செய்தவன். அனுமான் வாயு தேவனுடைய அமிசமாக அவனருளால் வானரவீரன் கேசரியின் மனைவி அஞ்சனையிடத்துப்பிறந்தவன். எல்லாத் தேவர்களாலும் தம்தம்மால் இவனுக்கு அழிவில்லை என்று சாகாவரம் பெற்றவன். சூரியனுடைய தேருடன் நடந்து அவனிடம் எல்லாக் கலைகளையும் கற்றவன். இவன் கல்லாதது ஒன்றுமில்லை என இராமனால் பாராட்டப் பெற்றவன். சுக்கிரீவனுடைய நண்பனாகவும் மந்திரியாகவும் இருந்து அவனை இராமனுடன் நட்புக் கொள்ளச் செய்தவன். முனிவர்களின் சாபத்தால் தன் வலிமையை மறந்திருப்பவன் சாம்பவன் எடுத்துச்கூற உணர்வு பெற்றுச் செயற்கரியவற்றை எல்லாம் செய்பவன். ருசிய முகபர் வதத்தில் சுக்கிரீவனோடு இருக்கும்போது அங்கு வந்த ராம லட்சுமணர்களைக் கண்டு அவர்களுக்கு அடிமையானவன். சீதையைத் தேட இராமனிடம் அடையாளம் பெற்றுக் கொண்டு கடலைத் தாவிப் பறந்து சென்று இலங்கை முழுதும் சுற்றி ஓய்ந்து பின் அசோக வனத்தில் சீதையைக்கண்டவன். கடலைத் தாண்டும் பொழுது தடுத்த இலங்கணியை வென்று துரத்தியவன். சீதையினிடத்து கணையாழியைக் காட்டித் தன் விசுவரூபத்தையும் காட்டி மகிழச்செய்து அவளிடம் சூளாமணியைப் பெற்றுத் திரும்பியவன். திரும்புங்கால் அசோகவனத்தை அழிக்க கிங்கரர்கள் எதிர்க்க அவர்களைக் கொன்று பின் இந்திரசித்துவின் பிரம்மாஸ்திரத்தால் கட்டுண்டு இராவணன் முன்நிறுத்தப்பட்டப் போது தன்னை இராம |