67

தூதன் என்றும் சீதையை விட்டு விட்டுச் சரணடைக என்று கூறியபோது
இராவணன் விபீஷணன் கூற்றால்கொல்லாமல் வாலில் தீவைத்துத்
துரத்தியபோது அத்தீயினால் இலங்கையை எரியூட்டி அழித்துமீண்டவன்.
இராமனைக் கண்டு சீதையின் இருப்பையும் கற்பின் மாட்சியையும் விளம்பிச்
சூடாமணியைத் தந்தவன். அடைக்கலம் கூறி வந்த விபீஷணனை ஏற்கலாம்
என்றுகூறி அவன் சிறப்பைச்சொன்னவன். இலங்கைப் போரில்
இலக்குவனைத் தன்தோளில் ஏந்தி இந்திரசித்தோடு போரிடச்செய்தவன்.
இந்திரசித்துவின் பிரமாஸ்திரத்தால் கட்டுண்டபோது சாம்பவன் கூற்றால்
சஞ்சீவிமலையைப் பெயர்த்து வந்து இலக்குவனையும் வானர சேனைகளையும்
உயிர்ப்பித்தவன். இலங்கைவெற்றிக்குப் பின் மீண்ட ராமன் பரத்துவாசர்
ஆசிரமத்தில் விருந்துண்ணத் தங்க பரதனுக்குவருகை சொல்லி அனுப்பத்
தீயில் மூழ்க இருந்த பரதனை வந்து காத்தவன். இராமனாலும் சீதையாலும்
சிரஞ்சீவிப் பட்டம் பெற்றவன் இராம பட்டாபிஷேகத்தின் போது அவனது
திருவடிகளைத் தாங்கிமகிழ்ந்தவன். வைணவர்களால் சீறிய திருவடி என்று
வணங்கிப் போற்றப் பெறுபவன்.

வாலி

     இந்திரனுடைய அமிசமாக வானரகுலத்தில் தோன்றிக் கிஷ்கிந்தையை
அரசாண்டவன் சிவபக்தன் சிவபூசை தவறாதவன். சிவனிடம் பெருவரம்
பெற்றவன். தன்னொடு பொர வருபவரின் ஆற்றலில்செம்பாதி
தன்னையடைய வரம் பெற்றவன். இராவணன் தன்னொடு பொரவந்த பொழுது
அவனைத் தன்வாலிற் சுற்றிப் பினைத்துக் கொண்டு எட்டுக்குல
மலைகளையும் தாவிச் சென்றவன் மாயாவிப் போரின்போது தன்னை
வஞ்சித்ததாக எண்ணிச் சுக்கிரீவனை அடித்துத் துரத்திவிட்டு அவன் மனைவி
உருமையைப் பறித்துக் கொண்டவன். தாரையின் கணவன் அங்கதனின்
தந்தை இராமபாணத்தில் வதையுற்ற போது இராமனை இகழ்ந்து பேசிப்பின்
அவன் திருமாலே என உணர்ந்து பொறுத்தாற்றும்படியும் தன் தம்பியையும்
மகனையும் காத்தல் வேண்டுமென அடைக்கலப் படுத்து வரம்பெற்று மோட்ச
மடைந்தவன்.

சுக்கிரீவன்

     சூரியனுடைய அமிசமாக வானரகுலத்தில் வாலியின் சகோதரனாகப்
பிறந்தவன். பெருவலியுடையவன். வாலிக்கு அஞ்சி மதங்கர் மலையில்
அனுமானுடன் ஒளிந்து வாழ்ந்து இராமன் வரஅவனோடு நட்புப்பூண்டு
மராமரத்தைத் துளைத்துக் காட்டச் சொல்லி ராமனுடைய பேராற்றலை
அறிந்து அவனால் வாலியை வீழச்செய்து கிஷ்கிந்தையின் அரசாட்சியை
ஏற்றவன் சீதையைத் தேடிவர வானர சேனைகளை அனுப்பிப் பின்
இராமனுக்குத் துணையாக இலங்கைப் போரில் தன் சேனையுடன் கலந்து
கொண்டவன். சுவேல மலையிலிருந்த போது இராவணன் அவன்
அரண்மனையில் மீது தோன்ற அவன் மீதுபாய்ந்து மல்யுத்தம் புரிந்து அவன்
முடிகளைப் பறித்து மீண்டவன். கும்பகருணன் மாயையினால்தூக்கிச்
சென்றபோது விழித்து அவன் மூக்கையும் காதையும் கடித்துக் கொண்டு
மீண்டவன். இராமர் பட்டாபிஷேகத்தின் போது கலந்துகொண்டு மகிழ்ந்தவன்.
இராமனால் உடன்பிறப்பாக ஏற்கப்பெற்றவன்.

அங்கதன்

    வாலியின் அரும்பெறல் மைந்தன் பேராற்றலுடையவன். சுவேல
மலையிலிருந்து