69

இராவணன்(தசக்கிரீவன்)

    விசிரவசுவிற்கு கேகசி என்பளிடம் பிறந்த முதல் மகன் பத்துத்
தலைகளும் இருபது கைகளும் உடையவன். தாயின் கட்டளையால் கடுந்தவம்
மேற்கொண்டு தன் தலைகளைத் திருகி அக்கினியிலிட்டுத் தவம் புரிந்தவன்.
இறைவனிடத்தும் பிரமனிடத்தும் ஒப்பற்ற பல வரங்களைப் பெற்றவன் சிவ
பக்தன். தான் இலங்கையில் வைத்துப் பூசிப்பதற்காகக் கயிலாய மலையை
வேரொடுபறித்தெடுத்து இறைவனால் நசுக்குண்டு பலகாலம் அழுதுபின்
நாரதன் உரையால் இறைவன் மனம் உருகுமாறு சாமகானம் பாடி
மலையடியினின்று மீண்டவன். இறைவனால் முப்பத்து முக்கோடி வாழ்நாளும்
மந்திரவாளும் பெற்றவன். வேத முதலாய கலைகளைப் பயின்று தேர்ந்தவன்.
சிறந்த இசைமேதை வீணையைத் தனது கொடிச் சின்னமாகக் கொண்டவன்.
இந்திரனை வென்று தேவர்களையெல்லாம் அடிமைப்படுத்தித் தனக்குப்
பணிபுரிய வைத்தவன். குபேரனை வென்று அவன் செல்வமெல்லாம்
கவர்ந்தவன். சூரியனை இலங்கை மேற்செல்லாது மருங்கே செல்லக்
கட்டளையிட்டவன். இலங்கையிலிருந்து மூன்று உலகத்தையும் ஆண்டவன்.
திக்கு யானைகளோடு போரிட்டு அவற்றின் தந்தங்களைத் தன் மார்பில் ஏற்று
முறியச் செய்தவன். மயன் மகளாகிய மண்டோதரி முதலியவர்களை மணந்து
இந்திரசித்து முதலாய மக்களைப் பெற்றவன். நளகூபரன் மனைவியாகிய
அரம்பையை வலிதிற் பற்றியதனால் இனி உடன்படாத மகளிரை வலியப்
பற்றினால் தலைவெடித்தழிவாய் எனச் சாபம் பெற்றவன். கார்த்த
வீரியனுடன் போரிட்டு அவன் வரத்தின்வலியால் தோற்றவன் பிறர்யாராலும்
வெல்லப்படாதவன். தன் தங்கையாகிய சூர்ப்பநகையின் துர்போதனையால்
சீதையின்பால் அடங்காத மோகமுற்று சீதையினிடமிருந்து இராம லக்குவரைப்
பிரிக்க மாரீசனை மாயமானாக ஏவி அவன் வஞ்சனையால் அவர்களைப்
பிரிந்து சந்நியாசி உருவொடுசீதையிடம் சென்று தனது உருவைக்காட்டி
அவள் மறுத்தமையால் அவளைப் பர்ண சாலையுடன் பெயர்த்தெடுத்து
விமானத்தின் மீது செல்லும்போது சடாயு எதிர்க்க அவனைச் சிவனது மந்திர
வாளால் வெட்டி இலங்கை சென்று அசோகவனத்தில் அரக்கியர் காவலோடு
சிறை வைத்தவன். திரிசடையைத் துணையாக வைத்தவன் அனுமான் கண்டு
சினந்து அவன் வாலில் தீயிடச் செய்துதுரத்தியவன். விபீடணனும்,
கும்பகருணனும் மாலியவானும் எடுத்துக் கூறிய அறிவுரைகளைக் கேளாமல்
தன் சேனைகளையும் மைந்தர்களையும் இராம இலக்குவரோடு போரிடச்
செய்து அழித்தவன். எல்லாம் சீதையால் விளைந்தது எனச் சினந்து அவளை
வெட்டப்புக மகோதரனால் தடுக்கப்பெற்றுப் பின் மூலபலத்தையெல்லாம்
இழந்து ராமனோடு போரிட்டு மாண்டவன்.

கும்பகர்ணன்

    இராவணனுடன் பிறந்ததம்பி ஒப்பற்ற வலிமையுடையவன். பிரமனிடம்
அரிய வரங்களைப்பெற்றவன் நித்யத்வம் வேண்டும் என வரங்கேட்க
முனைந்த போது நாமகளின் சூழ்ச்சியால் நாக்குழற நித்ரைத்வம் என வேண்டி
எப்பொழுதும் உறக்கத்திலிருப்பவன் இவன் விழித்தெழுந்தால் தேவர்கள்
அஞ்சுவர். இவன் உறக்கத்தைக் கலைக்கக் கிங்கரர்கள் ஆயுதங்களைக்
கொண்டுதாக்குவர் உறங்கி எழுந்ததும் வண்டிக் கணக்கான உணவையும்
குடங்கணக்கான மதுவையும் அருந்துபவன் அண்ணனிடத்து அன்பு
பூண்டவன். சீதையை விட்டுவிடும்படி இராவணனுக்கு அறிவுரை கூறியும்
அவன்கோளாமையால் அவன் விருப்பப்படி இராமனோடு போரிட
முற்பட்டவன். விபீஷணன் இராமனோடு சேர்ந்து