72

தூஷணன்

     வீசிரவசுவிற்குக் கலை என்பவளிடம் பிறந்தவன் திரிசிரன் சகோதரன்.
சூர்ப்பநகையின்தூண்டுதலால் வந்து இராமனோடு போரிட்டுமாண்டவன்.

மகோதரன்

     இராவணனுடைய முதலமைச்சன் பேராற்றல் பொருந்தியவன்
பிசாசுகளால் கட்டப்பட்ட பத்துகோடித் தேர்ப்படையை உடையவன். மருந்து
என்பனை மாயா சனகனாக்கிச் சீதை முன் கொண்டு சென்றுதுன்புறுத்திச்
சீதை கலங்குமாறு செய்தவன். சீதையை வெட்டச் சென்ற இராவணனைத்
தடுத்துப்போரிடத் தூண்டியவன் பல மாயைகள் வல்லவன் முற்பிறப்பில்
கைடபனாகப் பிறந்திருந்தவன்.இராமனால் கொல்லப்பட்டவன்.

தேவாந்தகன்

     இராவணன் மக்களுள் ஒருவன் தேவர்களுக்கு எமன் போன்றவன்
அதிகாயனுடன் இணைந்து போரிடும்போது அனுமானால் கொல்லப்பட்டவன்.

அகம்பன்

     சுமாலியின் மகன் கரதூடணர்கள் இராமனால் கொல்லப்பட்ட
விவரங்களை இராவணனுக்குக்கூறியவன் போரில் அனுமானால்
கொல்லப்பட்டவன்.

கும்பன்

     இராவணனுக்கு நண்பன், சித்தர்களைச் சிறையிட்டவன் சுக்ரீவனால்
கொல்லப்பட்டவன்.

நிகும்பன்

     இராவணனுக்கு மாமன் முறையினன் சீதையை விட்டுவிடும்படி
இராவணனை வேண்டியவன் அனுமானால்அறையுண்டு மாண்டவன்.

மகாபாரிசன்

     இராவணன் மந்திரிகளுள் ஒருவன் இராம பாணத்தால் பிளவுண்டு
மாண்டவன்.

பிரகஸ்தன்

     இராவணன் சேனாதிபதி சுமாலியின் மகன் சுக்கிரீவன்
படைத்தலைவனாகிய நீலனால்கொல்லப்பட்டவன்.

தூரன் - சாரன்

     இராவணனுடைய ஒற்றர்கள் வானர் உருவில் இராமன் இருப்பிடம்
சென்று ஒற்றாராய்ந்தபொழுதுவிபீடணால் பிடிக்கப்பெற்றவர்கள். இராமன்
அவர்களைத் துன்புறுத்தாமல் இராவணனுக்கு கூறும்படியாகஎச்சரிக்கை
மொழிகளைக் கூறி விடுவிக்கப்