73 பட்டவர்கள் இராவணனுக்குச் சுவேலமலையிலிருந்த இராமன் முதலியோரைக் காட்டி விளக்கம்சொன்னவர்கள். வச்சிரதந்தன், இரணமஸ்தன், அக்கினிகேது, புகைக்கண்ணன், மகராக்கன், ரத்தாட்சன்,பேயன் முதலியோர் இராவணன் சேனாதிபதிகள். கவந்தன் தனு என்னும் கந்தவருவன் தூலசிரசு என்னும் முனிவனால் அரக்கனாகுமாறு சபிக்கப்பட்டவன்.இந்திரன் இவன் தலையில் வச்சிராயுதத்தினால் அடிக்க இவன்தலை வயிற்றுக்குள் அமிழ்ந்தது.வயிற்றில் தலையுடையவனானான். தண்டகாரணியத்தில் வந்த போது இராமலக்குவரைத் தன்நீண்டகைகளால் அகப்படுத்தியபோது அவர்களால் வெட்டுண்டு சாபநீக்கப்பெற்று அவர்களைவழிபட்டுச் சென்றவன். விராதன் தேவலோகத்தில் வீணைவாசிக்கும் ஒரு தும்புருவன் அரம்பையினிடத்துக் காதல்கொண்டைமையான் தேவர்களால் அரக்கனாகச் சபிக்கப்பட்டவன். வனத்தில் இருந்த சீதையைப்பறித்துச் சென்றபோது இராமலக்குவரால் கைகள் வெட்டப்பெற்றுச் சாபநீக்கம் பெற்றவன். அவர்களைத் துதி செய்து சுவர்க்க மடைந்தவன். வசிஷ்டர் பிரம்மாவின் மானச புத்திரர்களுள் ஒருவர் சப்தரிஷிகளுள் ஒருவராய பிரம்மரிஷி. சூரியவமிசத்து அரசர்களின் குலகுரு தசரதனை அமைதிப்படுத்தி இராமலக்குவரை விசுவாமித்திரனுடன்அனுப்பச் செய்தவர். இராமன் வனம் சென்றபோது வருந்தியவர்களுக்குச் சமாதானம் கூறிப் பரதனுக்குபுத்திமதி கூறியவர். இராவண வதம் முடிந்து மீண்டபின் இராமனுக்குப் பட்டாபிஷேகம் செய்துவைத்தவர் அருந்ததியின் கணவர். விசுவாமித்திரர் காதிராசனுக்குப் பிறந்தவர் சத்திரிய வமிசத்தவர். வசிட்டரை எதிர்த்து அவரை வெல்லமுடியாமல் வருந்தி தவத்தின் மிக்க தொன்றில்லை என உணர்ந்து கடுந்தவமியற்றி பேராற்றல்பலபெற்றவர். திரிசங்கு மன்னன் பொருட்டுப் புதிய சுவர்க்கத்தைப் படைத்தவர்.இராமலக்குவர்களை அழைத்துச் சென்று தாடகையை வதைக்கச் செய்தவர் அவர்கட்குப் பல தெய்வீகஅஸ்திரங்களையும் மந்திரங்களையும் அருளியவர். மிதிலைக்கு அழைத்துச் சென்று வில்லை முறிக்கச்செய்து இராமனுக்குச் சீதையை மணம் செய்து வைத்தவர். கலைக்கோட்டுமுனிவர் உரோமபத மன்னன் வேண்டுகோளால் அயோத்திக்கு வந்து தசரதனை யாகம் செய்வித்து அவனுக்குமக்கட் பேறளித்தவர். பரத்துவாசர் பிரகஸ்பதியின் அருளால் உதத்தியன் மமதை ஆகிய இருவருக்கும் மகனாகப் |