74

பிறந்தவர். பெரும்தவசி இவர் ஆசிரமம் சிருங்கிபேரம். இராமன் வனம்
புகும்போது அவர்களைஆசீர்வதித்துத் தன் ஆசிரமத்தில் தங்கவைத்துப்
பின் அனுப்பியவர். ராவண வதம் முடிந்துவரும்போது இராமன்
முதலானோர்க்கு பெருவிருந்தளித்து மகிழ்ந்தவர். ருக்வேதத்தில் ஆறாவது
காண்டத்திற்குக் கீதங்களைச் செய்தவர்.

மதங்கரீஷி

     இந்திரதனுசைப் பரசுராமருக்கு அளித்தவர் துந்துபியைக் கொன்று
அவன் உடலை இவர் இருந்தமலையில் வீசினமையால் வாலி இம்மலையில்
ஏறின் அவன்தலை வெடித்து மாளச் சாபமிட்டவர்.

கௌதமர்

     தீர்க்கதம முனிவரின் குமாரர் இந்திரன் இவருடைய உருவில் வந்து
அகலிகையைக் கூடினமையால்வெகுண்டு அவனையும் அகலிகையையும்
சபித்து அகலிகை வேண்ட இராமன் பாதம்பட்ட அளவில் கல்லுருநீங்கச்
சாபநிவர்த்தி கூறியவர்.

அகத்தியர்

     முனிவர்களுள் தலைவர் இராமன் வனவாசத்தில் இவருடைய
ஆசிரமத்திற்கு வந்த போதுஆசீர்வதித்துப் பல அஸ்திரங்களையும்
தனுசையும் வழங்கி அருளியவர் தமிழ் முனிவர் எனக்கம்பரால் போற்றப்
பெறுபவர்.

அத்திரி

     இராமர் வனவாசத்தின்போது அவர்களைத் தனது ஆசிரமத்தில் தங்கச்
செய்து ஆசீர்வதித்துத்தன் மனைவி அநசூயைக் கொண்டு சீதைக்குச் சகல
ஆபரணங்களையும் அணிவிக்கச் செய்தவர்.

சரபங்கர்

     தண்டகாரணியில் வாழ்ந்தவர் இராமஇலக்குவன் சீதை ஆகியோரைத்
தனது ஆசிரமத்தில்வரவேற்று உபசரித்துத் தன் மனைவியுடன்
மோட்சமடைந்தவர்.

தண்டகாரணிய ரிஷிகள்

     இராமர் வனவாசத்தின்போது அரக்கர்களின் கொடுமை கூறித் தம்மைக்
காத்தருளவேண்டியவர்கள்.

                         
மகளிர்
கோசலை


     தசரதன் மனைவியருள் முதலாமவள். இராமனைப் பெற்றதாய் கோசல
நாட்டினள். பரதனைவளர்த்தவள் அவன் மீது பெருமதிப்புக் கொண்டவள்,
பரதன் தீயில் மூழ்க முயன்றபோது தடுத்துப்புலம்பியவள்.