75

கைகேயி

     கேகய நாட்டு அரசன் மகள், தசரதன் காதல் மனைவி பரதனைப்
பெற்றவள். இராமனைவளர்த்தவள் இராமனுடைய முடிசூட்டினைக் கேட்டு
மகிழ்ந்து பின் கூனியின் போதனையால் தசரதனிடம்வரம் பெற்று
இராமனைக் கானகஞ் செல்லச் செய்தவள். இராமனால் பெருமதிப்புடன்
போற்றப்பெற்றவள்.

சுமித்திரை

     தசரதனின் மூன்றாவது மனைவி உயர்ந்த பண்புடையவள்.
இலட்சுமணனையும் சத்துருக்கணனையும்பெற்றவள். இராமன் மீது பேரன்பு
கொண்டவள். இராமனுடன் வனத்திற்குச் சென்று பணிவிடைசெய்யுமாறு
இலக்குவனைப் பணித்தவள்.

மந்தரை (கூனி)

     கைகேயியின் செவிலித்தாய். இளம் பருவத்தில் தன் முதுகின்மீது
இராமன் மண்ணுருண்டை எய்தவிளையாட்டினை வெறுத்து இராமன்
முடிசூடா வண்ணம் கைகேயியின் மனத்தைக் கலைத்து அவளால் அவனை
வனத்திற்கு ஏகுமாறு செய்தவள்.

சீதை (ஜானகி)

     மிதிலை மன்னனாகிய சனகனின் (வளர்ப்பு) மகள் அதனான் ஜானகி
என்பது இவளுக்குச்சிறப்புப் பெயர். திருமகளின் அவதாரம். இராமன்
மனைவி. இராமனுடன் வனத்திற்குச் சென்றவள்.இராவணன் தன்னை
வஞ்சித்து விமானத்திற் கடத்திச் சென்ற போது அநசூயை தனக்கு
அணிவித்திருந்தஆபரணங்களை இராமன் அடையளாம் கண்டு கொள்வதற்கு
கிஷ்கிந்தை மலையில் வீசிச் சென்றவள்.இராவணனால் அசோகவனத்தில்
சிறைவைக்கப் பெற்றவள் திரிசடையின் அன்புரையால்துயர்பொறுத்திருந்து
பின் உயிர்விட முற்பட்டபோது அனுமானுடைய வரவால் அவனுடைய
மொழியால் அவன்தந்த அடையாளமாகிய கணையாழியைப் பெற்று
உயிர்விடாமல் விரைந்து வந்து மீட்டுச் செல்லும்படிஅனுமனிடம் கூறியவள்.
அனுமன் தன் தோள் மீது சுமந்து மீட்டுச் செல்ல வேண்டிய போது அது
இராமனுடைய ஆண்மைக்கும் வில்லுக்கும் இழுக்காகும். எனமறுத்து
அரக்கர்களை அழித்துத் தன்னைமீட்டுச்செல்ல வேண்டி கூறி அனுமான்
வாலில் தீயிட்ட போது அது அவனைச் சுடாதிருக்க அக்கினிதேவனை
வேண்டி ஆணையிட்டவன். அனுமானுக்குச் சிரஞ்சீவிப் பட்டமளித்தவள்.
உலகோர் ஐயம்நீங்கத் தீயில் மூழ்க இராமன் கட்டளையிட்டபோது
நெருப்பில் மூழ்கித் தன்கற்பின் சிறப்பைவெளிப்படுத்தியவள் தெய்வ
உருவில் வந்த தசரதனால் பாராட்டப் பெற்றவள். தன்னைச்சூழ்ந்திருந்து
ஊறு செய்திருந்த அரக்கியர்களை அனுமான் கொல்ல உத்தரவு
கேட்டபொழுது அவர்களைமன்னித்து அபயம் அளித்தவள்.

நீலமாலை

     மிதிலையில் சீதையின் தோழியாக இருந்தவள் இராமன் வில்வளைத்து
முறித்த செய்தியைச்சீதைக்கு அறிவித்தவள்.