76

அகலிகை

     கௌதம முனிவரின் மனைவி. இந்திரன் கௌதமர் வடிவத்தில் வந்து
தன்னைக் கூடியபோது வேறுபாடு உணர்ந்த பின்னும் உடன்பட்டிருந்தமையால்
கௌதமரால் கல்லுருவாகச் சபிக்கப்பெற்று இராமனுடைய திருவடி
தீண்டப்பெற்றமையால் கல்லுரூவம் நீங்கப் பெற்றவள்.

மண்டோதரி

     மயன் என்னும் தெய்வதச்சனுடைய மகள் இராவணன் மனைவியருள்
சிறந்தவள். இந்திரசித்துவின்தாய் உத்தமக் கற்புடையவள் இராவணன்
மாண்டபோது அவன்மீது விழுந்து புரண்டு உயிர் நீத்தவள்.

தானியமாலை

     இராவணன் மனைவியருள் குறிப்பிடத்தக்க ஒருத்தி அதிகாயனின் தாய்.
அதிகாயன் மாண்டபோதுபெரிதும் புலம்பியவள்.

திரிசடை

     சீதை அசோகவனத்தில் சிறைப்பட்டிருந்த போது அவளது துயரத்தைத்
தேற்றி வந்தவள்.தான்கண்ட கனவின் பயனால் இராவணன் அழிவையும்
சீதையின் மீட்பையும் அவளிடம் வற்புறுத்திக்கூறியவள். இராவணன்
அடைந்துள்ள சாபவரலாற்றினைக் கூறிச் சீதையைக் காத்தவள். விபீஷணன்
மகள்.

தாரை

     வாலியின் மனைவி. அங்கதனின் தாய், வாலி சுக்கிரீவனுடன் போர்புரிய
முற்பட்ட போதுதடுத்துக் கூறியவள். வாலியின் பிரிவினால் பெருந்துயர்
கொண்டவள். இலட்சுமணன் சுக்கிரீவன்மீது சினங்கொண்டு வந்தபோது
அவன் சீற்றத்தை மாற்றியவள்.

உருமை

     சுக்கிரீவன் மனைவி.

தாடகை

     சுகேதுவின் மகள் சுந்தன் என்பவன் மனைவி சுபாகு. மாரீசன்
இவர்களின் தாய். அகத்தியரால் சபிக்கப்பட்ட அரக்கி, முனிவர்களுக்கு
இடையூறு செய்து வந்தவள்; விசுவாமித்திரரின கட்டளையால் இராமனின்
பாணத்திற்குப் பலியானவள்.

சூர்ப்பநகை

     விச்சிரவசுவின் மகள் வித்யுச்வன் என்பவனின் மனைவி இராவணன்
தங்கை பஞ்சவடியில்இராமனைக் கண்டு மோகித்து அவன் தன்னை
விரும்பவில்லை என்று கருதி சீதையைக் கொல்லமுற்பட்டபோது
இலக்குவனால் அடிபட்டு மூக்கும் காதும் முலையும்