77

அரியப்பட்டவள். இராம இலக்குவரைப் பழிவாங்குதற் பொருட்டு
இராவணனிடம் சென்று சீதையின் பேரழகைக்கூறி அவனை மோகமுறச்
செய்தவள். செய்து அவனைச் சீதையைச் சிறை எடுக்கச் செய்தவள்.
காமவல்லி என்பதும் இவளுக்குப் பெயர்.

அசோமுகி

     அசமுகன் தங்கை நீர்கொண்டு வரச்சென்ற இலக்குமனைக் கண்டு
காமுற்று அவனை வேண்டிப்பின் அச்சுறுத்தியபோது அவனால் மடிந்தவள்.
மாயை பல வல்லவள் வாதாபி வில்லவனின் தாய்.

கதை நிகழும் இடங்கள்:

அயோத்தி, மிதிலை, கிஷ்கிந்தை, இலங்கை, சித்திரகூடம், தண்டகாரணியம்
பஞ்சவடி, மதங்கவடி,சேது, சுவேலமலை, மயேந்திரமலை, கங்கைக்கரை,
பம்பைக்கரை.