80

நீடிய புகழ்சேர் ஆயர்      பாடிவளர் கண்ணன் அடி
நாடி மலர் சூடியிசை        பாடிய கருணாகரனை          (இப்)

ஓங்குபுகழ் கவுர்மெண்டு    பாங்கியில் டிப்டிமேனேசர்
வேங்கடா சலச்செட்டியார்   பாங்கனை இன்றிங்கென் முன்னே (இப்)

முத்தமிழி னாலுயர்வு       பெற்ற புலவோர்கள் இடர்
உற்ற சமயத்தினில்அ       டுத்து செய்சகாயனை        (இப்)

ஆரம்ஏறி கடல் சூழும்       பாருள்ளோர் புகழும் எழு
மூரினில் வாழ்ந்திடு முல்லைத் தாரனை உதாரனை    (இப்)

சென்னைபுரி மன்னிவளர்        நன்னயக் கவுண்டாண்டு
சென்னல் ஆபீஸ் தன்னில்மிகு    உன்னத உத்தியோகனை (இப்)

மாபாவிகளைக் கொன்றேஇப் பூபாலனம் செய்யதேவ
கீபாலன் வளர்ந்தந்த        கோபால குலமணியை       (இப்)

-----

உதவிச்சிறப்பு

இஃது அங்கம்மாள் பேட்டை

வேங்கடாசல செட்டியார் பேரில்

தரு

தோடிராகம்                              ஆதிதாளம்

பல்லவி

     செய்தால் புலவர்களுக்கேச   காயம்
     செய்து கவிபெறுதல்        ஞாயம்         (செய்)

அநுபல்லவி

செய்யே அனஞ்சேர் அங்கம்மாள் பேட்டைவாழ்
     செயமுத்து வெங்கடாசல செட்டியார் குமாரா
மெய்யே உருக்கொண்டு வந்ததென்ன வந்த
     வெங்கடாசல தீரா ஓங்குபுகழ் செம்பீரா
வீரா அரிவையர் மனமகிழ் மாரா
     காரார் கரமுளகர்னாவ தாரா                (செய்)