81 சரணங்கள் 1. சீதமதிவதனன் ஏதமில் சீயகங்கன் செய்த சகாயம் தன்னை மதித்து-பவணந்தி சிறந்தநன் னூலிலவன் இறந்தும் இறவாமலே செய்தானே பாயிரத்துள் பதித்து-பின்னும் தீதில் அருணகிரி நாதருக்குபகாரம் செய்து மனமகிழத் துதித்து-பிரவுட தேவமகாராயனும் மேவித்திருப்புகழில் திகழ்ந்திருக்கப் பெற்றான்பார் குதித்து-நாளும் கோதில் மொழிகள்ராக வனைப்போல் மொழியும் சீலா குணசிகாமணி எனஎவரும் புகழும் மேலா குணமில் பரமலோ பியர்பிரதி கூலா குணம் உடையபுலவர் குலபரி பாலா (செய்) 2. சங்கையில்லா மலந்த கொங்கராயர் முன்செய் சகாயத்தினாவல்லவோ நற்றார் - வில்லிப்புத்தூரார் சந்திரசூரியர் உள்ள அளவும்தம் புகழ்நிற்க சயபாரதத்தில் பாடப் பெற்றார் - கார்போற்சொரியும் அங்கை உடையதிரு வெண்ணெய் நல்லூர்ச்சடை யப்ப முதலியாரும் கற்றார் - கம்பருக்குமுன் அகம் மகிழ்ந்திடவே சகாயம் செய்தேராமா யணத்தில் என்றைக்கும் நிலையுற்றார் - ஆதலினாலே மங்களமாம் செந்தோன்றி மாலைமருவும் மார்பா வைசிய குலமிலங்க வந்துதித்திடும் தீபா மதுரம் ஒழுகமிருது மொழிபகர் பூபா வரும் இரவலர்மகிழ அருள்பிர தாபா (செய்) 3. அழிவில் வேதங்கள் ஓதிக்கிழி அறுத்திட்டபெரி யாழ்வாருக் கோர்சகாயம் புரிந்து - பல்லாண்டில் அகன்ற உலகீரேழ் உள்ளளவும் செல்வநம்பியும் அமர்ந்திருக்கின்றான் புகழ் விரிந்து - எங்கும்நிறைந்த வழுவில் மாயவன்பால் வாள்வலியால் மந்திரங்கொண்ட மங்கையர் கோனுக்குமுன் பரிந்து-சகாயம் |