82

மகிழச்செய்தே பல்லவராயன் திருமொழியில்
     வாழ்ந்திருக்கின்றான் நீபார் தெரிந்து - இன்னமும் சொல்வேன்
ஒழிவில்லாமல் உலகோருக் களித்துச் சொர்ணம்
     ஓங்குகவி பெற்றாரே உலகில் பிரபுக்கள்  முன்னம்
உடல்பொருள்கள் எவையும் நிலையிலே       பின்னம்
     உறுதியிதுவேறு       துதியிலே       இன்னம்   (செய்)

நவமன்மதனைப் போல்உருவம் இருந்தென் சௌபாக்கியம்
     நலமிருந்தென் என்றுள்ளம்  வைத்தாய் - பாடும்

நாவலமைவுடைய பாவலர்க் களித்துப்பா
     நாம்கொள்வோம் என்றானந்தம்    உற்றாய் - இந்தப்
புவியில் இப்படிச் செய்தே கவிகள் பெற்றார் என்றுன்தன்
     புத்தியினாலும் ஆலோ சித்தாய் நீயும்
புகழ்பெற எங்கள்மனம் மகிழ்வுறச் செய்தெங்களால்
     புத்தமதம் போலக்கவி  பெற்றாய் - இனிஓர்

கவியில்லா மானிடர்இப் புவிமேல் இருந்து     மின்ன
     தன்கனக வஸ்துவாகனம் அனுபோகித்   தென்ன
ததியினில் உதவிசெய் பவர்களில்            உன்ன
     தானே இனிஎவர்கள் எவரினும்புகழ்     துன்ன     (செய்)