87 வருணனைகள் சித்திரகூடத்தின் வளத்தைச் சீதைக்கு இராமன் காட்டிக் கூறும் பாடலிற் சில அடிகள் “பாராய் பெண்ணே பாராய் சீராக நமக்குநேர் ஆகிறசித்திர கூடமலை ரத்தினபீடம் போலே மாதவர் முனிவர்சொல் வேதங்களைக் கிளி வாடிக்கையாற் கற்று வனமெங்கும் படிப்பதும் கோதும் தினைக் கொல்லையினிற் பம்பைகள் எடுத்துக் குரங்குகள் அடிப்பதும் ஆதவன் குதிரையைப்போல் பசும்பாறை ஒளிபாய்ந்த ஆடுகள் பசுமையாய்க் கோடேறி நடிப்பதும் பேதமில்லாமல் மேல்ஓடும் மேகத்தைப் பெண்யானை எனக்கையால் யானைகள் பிடிப்பதும்” பாராய் பெண்ணே! எனக்கூறும் கற்பனை பயிலத்தக்கதாம். இவ்வாறே ஏனைய சரணங்களும்அமைந்துள்ளன. இராமனைச் சீதையிடத்து அனுமான் வருணிக்குமிடத்து “அந்தராம சௌந்திரியம் என்னால் அறிந்து சொல்லப்போமோ” எனத் தொடங்கி கந்தமேவுமர விந்தமலரும் அவர் காலுக்கு நிகராமோ, கைக்குத்தான் சொல்லப்போமோ உருண்ட மணிமுழங் காலுக்குவமை அவர் உடைய அட்சயதூணி ஏற்குமே திரண்ட பெருந்தொடை இரண்டுக்கும் எட்டுத் திசையானை துதிக்கையும் தோற்குமே ................................................................................... விரிந்த மார்புக்கிணை பூமி அகலங் காணும் விளங்குங் கழுத்துக்குநேர் இளங்க முகே பூணும் பரந்த புசங்களுக்கு மேரு மலையும் நாணும் பார்க்கப் பார்க்கப் பதினாயிரங் கண்கள் வேணும் (சுந்-தரு 8) சூர்ப்பணகை இராமனைக்கண்டு அவன் பேரழகில் மயங்கிக் கூறுகின்ற விடத்து, |