88

     தேவனோ மனிதன் தானோ யாவனோ யௌனமுள்ள
     சித்தனோ இவன்கர்த்தனோ பிரமன்
     பாவனையாற் கண்டபெண்கள்
     ஆவியைக் கொள்ளை கொள் என்று
     படைத்தானோ என்னை உடைத்தானோ? என்கிறாள்

இவ்வாறே ஏனைய திபதைகளும் அமைந்துள்ளன.   (ஆரணி திப 3)

அவளே சீதையின் பேரழகை

     காணவேண்டும் லட்சம் கண்கள்.
     சீதா தேவிதன் காலுக்கு நிகரோ பெண்கள்
     குவளை விழிகளோ பாணம் அவள்தன்
     வார்த்தை கொண்டால் அதுவே கல்யாணம்
     நவரத்தினத் தங்கத்தோடு
     நடையாலே அன்னப் பேடு
     அவனியிலே இல்லைஈடு. அவளுக்கவளே சோடு
     தங்கக் கொடி போல் இடையும் - சீவிவகிர்ந்து
     சாய்ந்த பின்னலின் சடையும்
     இங்கித மிருது வாக்கியம்
     இவளே தேவதா போக்கியம்
     மங்கையர்க் குள்ளே சிலாக்கியம்
     வாய்ச்சொல் உன்னதே பாக்கியம்       (ஆர. தரு.8)

என வருணிக்கின்றார். இந்திரசித்து இலக்குமணன் இரண்டாம் முறைப்போர்
வருணனையுள்.

     பெருஞ் சண்டை கேளீர்கள் அருஞ்சண்டை யாளிகள்
     தருந் திண்டேர் யானைகள் கருந்துண்ட சேனைகள்
     பெருஞ் சண்ட மாருதம் போல் நெருங் குண்டவாசிகள்
     மருங் கண்டவே தந்திரத் தோடு
     வருங் கண்டக இந்திரசித்தோடு.

     சிரத்தினில் மணிமகுடம் தரித்து மார்பிற் கவசம்
     பரித்துப் பணிகள் அலங் கரித்து வலியபெரும்
     கரத்தில் தனுவைக்கொண்டு சிரித்துமுப் புரங்களை
     எரித்த ருத்திரனைப் போல் பரித்து விக்கிரமத்துடன்” என்கிறார்