89 மேலும் துங்கத்தைக் கோரி ஓராயிரம் சிங்கத்தேர் ஏறி அலையெறியும் சீர்கொள் எழுகடலின் நீர்கள் கரைபுரளப் பார்கள் கிடுகிடெனச் சூர்கள் விடவிடென ஊர்கொள் பகுதிநிகர் ஏர்கொள் குடைகள்மலர்த் தார்கள் அசையு மணித்தேர்கள் ஆயிரங்கோடி புடைசுற்றித்தரவே அறுபது வெள்ளம் படைதத்தி வரவே... .... .... என்கிறார். இங்ஙனம் எளிய சொற்களால் கற்பார் உள்ளத்தை கவரும் திறம் போற்றத் தக்கதாகும். இறுதியாகஇராமர் பரத்துவாசமுனிவர் ஆசிரமத்தில் அவர் அளித்த விருந்தினைக் கூறுமிடத்து. “உண்டானே ராமன் - பரத்துவாசன் செய்தவிருந்து உண்டே ஆனந்தங் கொண்டானே” எனக் கூறி விருந்தினை வருணிக்கின்றார். அதனுள் ஒருபகுதி நானிலந்தனில் மாநலந்தரும் நானாவிதமுள்ள ரூபமும் வானமங் கையர்தானு கர்ந்திடும் வகைவகையான அ பூபமும் தேனுங் கறிவகைகள் தானும் குளிர்ந்தநல்ல பானகமும் சமைத்த போனகமும் கொண்டு சேனை ஆரவாரிக்கத் திருமேனியும் பூரிக்க (உண்) என்பதாகும். இங்ஙனம் உணவு முதல் யுத்தம் ஈறாக எந்தப் பொருளாயினும் சுவைததும்ப வருணிக்கும் திறம்பயின்று உவக்கத்தக்கதாகும். |