92

பேசப்படும் உரையாடல்கள் வசனமாகவும் பாட்டாகவும் அமையும்.
பாடல்களுக்குப் பக்கவாச்சியங்கள்துணைநிற்கும். முற்கால நாடகங்களில்
உரையாடல்கள் பெரும்பான்மையும் பாடல்களாகவும் சிறுபான்மை
வசனமாகவும் அமைந்திருந்தன. வசனத்திற்கு பக்கவாச்சியங்கள்
பயன்படுத்தாவிடினும் உணர்வுகளை வெளிப்படுத்துமிடத்துச் சிறுபான்மை
பக்கவாச்சியங்கள் பயன்படுத்தப்படும் பிற்கால இக்கால நாடகங்களுள் சில
முழுதும் வசன நடையாகவே அமைந்துள்ளன. ஒப்பனையும் மேடையும்
இன்றிச் சிலநாடகங்கள் இப்பொழுது நடைபெறுகின்றன.
 

இசை நாடகம்

     ஒப்பனை, நடிப்பு, முத்திரை வினையங்கள் இன்றிக் கதைபொதி
பாடல்களைத் தக்கபக்கவாச்சியங்களுடன் பண்ணும் தாளமும் அமைந்த
குரலிசையால் (இடையிடையே சிறிதளவு பேச்சுடன்)நாடக உணர்வுகளுக்கேற்ற
இராகங்களை அமைத்துப் பாடுவது இசைநாடகமாகும். கேட்போர் கதை
நிகழ்ச்சிகளை நன்குபுரிந்து கொள்ளும் வகையில் இடையிடையே நீண்ட
வசனங்களை இசையொடு கூட்டிப்பேசப்படும் சிறுபான்மை ஒப்பனை செய்து
கொண்டு இசைநாடகத்தை நிகழ்த்துவதும் உண்டு.

     இசை நாடகக்கதை நிகழ்ச்சிகளுக்கு ஏற்ப மேடையில் திரையமைப்புச்
செய்து கொள்ளுதலும்உண்டு. அங்ஙனம் காட்சியமைப்போடு கூடிய
இசைநாடகத்தில் அந்நாடகத்தை அமைத்த ஆசிரியன் திரைமறைவிலிருந்து
காட்சிகளை விளக்குதலும் உண்டு. மற்றும் காட்சி தொடங்குவதற்கு முன்
விதூடகவேடம்புனைந்த ஒருவர் பாடல்களால் காட்சிகளை விளக்குதலும்
உண்டு. இசைநாடகத்தின் ஒரு கூறேபிற்காலத்தில் காலட்சேபக் கலையாக
உருப்பெற்றது.

நாடக இலக்கியம்

     நாடக இலக்கியம் என்பது மேற்கூறிய மூவகைக்கலை நாடகக் கூறுகளை
உடையதாய்க் கண்ணாற்கண்டும் செவியாற் கேட்டும் துய்ப்பதன்றிச்
சொல்வடிவங்களைக் கண்ணாற் படித்துமனத்தான் உணர்ந்து சுவைத்துக்
களிப்பதற்கு உரியதாகும்.

     அது உரைநடை, செய்யுள் இசைப்பாட்டு என்னும் மூவகைப்படும்.
அவை இலக்கிய வடிவிற் படித்துச்சுவைத்துணரத் தக்கவையாகவும்
நடித்துக்காட்டுதற்கும் உரியவையாகவும் அமையும். படித்துணர்தற்குமட்டும்
உரியவாக அமைவன நாடகத் தமிழ் எனப்படும். நடித்துக் காண்பதற்கும்
உரியவாக அமைவனதமிழ் நாடகம் எனப்படும். எனவே நாடகத் தமிழ்
என்னுமிடத்து நாடகம் என்பது தமிழுக்கு அடைமொழியாகும் தமிழ் நாடகம்
என்றுமிடத்துத் தமிழ் என்பது நாடகத்திற்கு அடைமொழியாகும். அஃதாவது
நாடகத்தமிழ் எனின் நாடகப் பாங்கில் அமைந்த இலக்கியம் என்பதும் தமிழ்
நாடகம்எனின் இந்நாடகம் தமிழ் மொழியான் அமைந்தது என்பதும்
பொருளாகும்.

     அம் முறையில் நாடகத் தமிழ் என்பது இலக்கியத் துறையிலும் தமிழ்
நாடகம் என்பது கலைத்துறையிலும் சேரும். அவ்வகையில் குறவஞ்சி, பள்ளு,
குறம், கோவை முதலியவை நாடகத் தமிழ் எனப்படும். கலித்தொகை.
சிலப்பதிகாரம், கம்பராமாயணம் முதலிய இலக்கியங்களுள் நாடகக்கூறுகள்
அதிகமாக அமைந்துள்ளன. சிந்தாமணி,