| | நீதிநூல் |
| | | நுதல்-நெற்றி. தேவி-மனைவி. சேய்-மக்கள். சிறை-காவற்கூடம். சிலுகு-துன்பம். |
|
|
| | 5 பழிகுலத் தாழ்வினும் களவுபே ரிழிவே |
|
| 213 | தள்ள ரும்பெரும் பழியுளா ரென்னினுந் தரையில் எள்ளல் சோழி குலத்தரே யென்னினு மேசிக் கள்ள ரென்றவர்ப் பழித்திடப் பொறாரெனிற் களவிற் குள்ள பேரவ மானத்தை யுரைப்பதென் னுளமே. | |
| | நீக்கமுடியாத பெரும்பழியுள்ளவரும், தாழ்ந்த குலத்தைச் சார்ந்தவரும் தங்களைக் கள்வரெனப் பிறர் திட்டினால் மனம் பொறுக்க மாட்டார். அதனால் களவுப் பட்டத்தாலுண்டாகும் பேரிழிவு எவ்வளவு என்று சொல்ல முடியுமா? |
| | அவமானம்-பெருமையின்மை; இழிவு. |
| | 6 |
| | அச்சமெலாங் கள்வர் உள்ளத் தமர்ந்தன |
| 214 | அரிமுழை நுழைதல் போல அயலகம் புகும்போ தச்சம் பொருள்திரு டும்போ தச்சம் புறப்பட்டே குங்கா லச்சம் தெருவினி லெவர்க்கு மச்சம் கவர்ந்தன திளைக்க வச்சம் உருமுருக் கொண்டு கள்வ ருளங்குடி கொண்ட போலும். |
| சிங்கத்தின் குகையுள் நுழைவார் கொள்ளும் நடுக்கம் போன்று களவு செய்வதற்காக அயல் வீட்டில் நுழையும்போது அச்சம். பொருளைக் களவு செய்யும்பொழுது அச்சம். வெளியில் வரும் பொழுது அச்சம். தெருவில் கண்பார்க்கெல்லாம் அச்சம். களவுப் பொருளை நுகரும்பொழுது அச்சம். அதனால், அச்சமே உருக்கொண்டு கள்வர் நெஞ்சத்துக் குடிகொண்டது ஆகும். |
அரி-சிங்கம். முழை-குகை. கவர்ந்தன-களவுசெய்த பொருள்கள். உரும்-அச்சம்.7 எத்துன்பம் வந்தாலும் களவுசெய இசையேல் |
|
நிரந்தரம் பலநோ யுற்று நெடிதய ரினுங்கை யேந்தி இரந்துணப் பெருநி ரப்பே யெய்தினும் பகர வொண்ணா |
|
|
| |
| |
| |
| |
| |
| 215 |
| |