| கொலை |
| அரந்தைசூ ழினும்பொன் வவ்வும் அத்தொழிற் கியையா வண்ணம் வரந்தர வேண்டு மென்னக் கடவுளை வழுத்தாய் நெஞ்சே. |
|
| எந்நாளும் நீங்காத பல நோய் அடைந்து துன்புற்றாலும், கைஏந்திப் பிச்சை எடுக்கும்படி வறுமை வந்தாலும், சொல்லமுடியாத வருத்தம் ஏற்பட்டாலும் களவு செய்யும்படியான தீச்செயலுக்கு இசையாதபடி வாழ நெஞ்சமே ஆண்டவனை வணங்கித் தொழு. |
| நிரந்தரம்-எந்நாளும். அயர்தல்-கவலைகொள்ளல். நிரப்பு-வறுமை. அரந்தை-துன்பம். |
| 8 |
| கொல்ல நினைத்தலும் கொடுமொழியும் கொலையே |
216 | உயிரினை வதைத்திடல் வதைக்க வுன்னுதல் அயிலெனக் கொடியசொல் அறைத லெற்றல்வெண் தயிருடை மத்தெனத் தாபம் பல்புரிந்து அயலவர் ஆயுள்நாட் கழிவுண் டாக்குதல். |
உயிரைக் கொல்லுதல், கொல்ல நினைத்தல், கணைபோன்ற கொடிய சொற்களைக் கூறுதல், அடித்தல், தயிர்கடையும் மத்துப் போன்று பல துன்பஞ்செய்தல், அடுத்தார் வாழ்நாளைக் கெடுத்தல் முதலியவும் கொலையே. |
வதைத்தல்-கொல்லுதல். உன்னல்-நினைத்தல். அயில்-கணை. எற்றல்-அடித்தல். கருவழித்தல் துன்பம் களையாமை கொலையே |
கருவினை யழிக்குதல் கயமிங் கேனையார் மருவிட விரும்புதல் மற்றன் னோரிடர் ஒருவிட வகைசெயா தொழிதல் வெவ்விடஞ் சருவினி லிடல்கொடுஞ் சமர்க்கு டன்படல். |
|
|
|
|
|
|
217 |
|