| நீதிநூல் |
| கருவைக் கெடுத்தல் பிறர் கேடடைய வேண்டுமென்று ஆசைப் படல், அவர்க்கு ஏற்படும் துன்பம் நீங்குவதற்குரிய வகை செய்யாது இருத்தல், சோற்றில் நஞ்சிடுதல், சண்டைக்குச் சம்மதித்தல் முதலியவையும் கொலையே. |
| கயம்-கேடு. ஒருவிட-நீங்க. சரு-சோறு. சமர்-சண்டை. |
| 2 |
| செருக்கு கள் காமம் தீ தற்கொலை கொலையே |
218 |
முனைவுகட் காமம்வெம் முரண்மு தற்கொலை வினையினுக் கேதுவாம் வினைக்க மைந்திடல் மனையினிற் றீயிடல் மண்ணில் தற்கொலல் இனையயா வுங்கொலை யென்னும் வேதமே. |
| | செருக்கு, கள், காமம், பகை முதலியன கொலையைத் தூண்டும் கருவியாம்; இவற்றை மேற்கொள்ளல், வீட்டில் தீ வைத்தல், தற்கொலை முதலியவும் கொலையே. |
| முனைவு-செருக்கு. ஏது-கருவி. |
| 3 |
| கொலைஞர்க்கு உலகெலாம் கூறும் இயமனாம் |
219 | பெறலரு முயிர்தரும் பிறப்பி லானதை அறவொரு வழிசெய் வாண்மை பூண்டனன் பறவையை நரர்விலங் கினைப்ப டுக்குமோர் மறவனுக் குலகெலா மறலி யென்பவே. |
|
| பிறப்பு இறப்பு இல்லாத கடவுள் உயிர்கள் உய்ய அவைகட்குப் பிறப்பை அருளினான். அவைகள் உய்யுநிலை எய்தின் அவற்றின் பிறப்பற ஆண்மையும் பூண்டனன். அத்தொழிலால் அவனை இயமன் என்று கூறுவர். நல்லுயிர்க்கு இயமன் ஒருவனே. பறவையை, மக்களை, விலங்கைக் கொல்லும் தீய உயிர்க்கு உலக மெல்லாம் இயமன் ஆகும். |
| ஆண்மை-வலிமை. படுத்தல்-கொல்லுதல். மறலி-இயமன். |
| 4 |
| கொலையொறுப்புச் செய்யுரிமை மன்னற்கே கொள்வர் |
220 | கொலைபுரி வோரையுங் குடிவ ருந்தவே அலைவுசெய் பவரையும் ஆவி நீக்கிடத் தலைமுடி தரித்தவர் தமக்கு நீதியாம் இலைகொலை செயுமுறை யிதர ரார்க்குமே. |
|