| கொலை |
| கொலை செய்வோரையும், கொன்றாலொத்த பெருந்துன்பம் செய்வோரையும் உயிர்ஒறுப்புச் செய்யும் உரிமை மணிமுடி தாங்கிய வேந்தர்கே யுளது. அதுவே முறைமையுமாகும். மற்று யார்க்கும் உயிர் ஒருப்புச் செய்யும் உரிமையிலை. செயின் அது முறைகேடுமாகும். |
| அலை-துன்பம். ஆவி-உயிர். நீதி-முறைமை. இதரர்-மற்றவர். உயிர் ஒறுப்பு-கொலை. |
| 5 |
| குருதிக் கறையாடை கூறும் கொலைஞனை |
221 |
சுதமுறு முகத்தொடு சொல்லு மாற்றமும் பதமுறு கறைக்கறை படிந்த வாடையும் வதனையே காட்டலால் வதைம றைக்குதல் உதயனைக் கரத்தினால் மறைத்தல் ஒக்குமே. |
| | பொலிவிழந்த முகத்துடன் தடுமாற்றமுள்ள சொல்லும், குருதிக்கறை படிந்த ஆடையும், கொலைஞன் இவன் என்று காட்டுதலால், கொலையை மறைப்பது கதிரவனைக் கையினால் ஒருவன் மறைப்பதையே ஒக்கும். |
| சுதம்-பொலிவின்மை. கறை-குருதி. வதன்-கொலைஞன். உதயன்-கதிரவன். கரம்-கை. |
| 6 |
| அரியது நிகழினும் கொலைஞன் உயர்தலரிது |
222 | பவமற மாயினும் பவர்க்க முத்தியாய்ச் சிவமுறப் பொலியினுஞ் சிதைந்த ழிந்தவோர் சவமுயிர் மேவினுந் தகையில் காதகர் அவனியி லுயர்ந்திட லரிது நெஞ்சமே. |
|
| மனமே, பாவம் புண்ணியமாக மாறினும் இருளுலகம் ஒளியுலகாய்ப் பேரின்பம் விளங்கினும், வெட்டுண்டு மாண்டழிந்த பிணம் மீண்டும் உயிர்பெற்று வாழினும் கொலைஞர் மேன்மை எய்துதல் இன்று. |
| பவர்க்கம்-நரகம்; இருளுலகம். முத்தி-ஒளியுலகம். சிவம்-பேரின்பம். காதகன்-கொலைஞன். |
| 7 |