| | நீதிநூல் |
| | குடும்பம் முற்றுங் கோறலாம் தலைவற் கோறல் |
| 223 | பத்தினி சேயரும் பரிச னங்களும் தத்தம நிலைகெடத் தலைவ னைச்சமன் ஒத்தவ னியிற்கொல லொருவன் றன்னையன்று அத்தனை பேரையு மடுதல் போலுமே. |
|
| | |
| | மனைவி மக்கள் ஒக்கல் முதலிய அனைவர்களும் நிலைகெட்டு அழியும்படி அவர்களைப் பேணிக் காப்பாற்றிய குடும்பத்தலைவனை இயமனை யொத்து ஒருவன் கொன்றால், அக்கொலை அக்குடும்பம் முழுவதையுமே கொன்றதை யொக்கும். |
| | பத்தினி-மனைவி. சேயர்-மக்கள். பரிசனம்-சுற்றத்தார்; ஒக்கல். சமன்-இயமன். |
| |
8 | | | கொலைஞனை விருப்பாய்க் கூடுவான் எமன் |
| 224 | தீயிடை மூழ்கினோன் சிங்கி யுண்டவன் மாய்விலா துய்யினும் வதனுய் யானமன் ஆயதன் றொழில்புரி வோனை யன்பொடு மேயதன் னுலகினுக் கீண்ட ழைக்குமே. |
|
| | தீக்குளித்தோனும் நஞ்சுண்டவனும் ஒருவேளை சாவாது பிழைத்தாலும், கொலைஞன் ஒருநாளும் எமனுக்குத் தப்பான். எமன் தன் தொழிலாகிய சாவினைச் செய்யும் கொலைஞனை மிகவும் அன்புடன் தன்னுலகுக்கு அழைத்துக்கொள்வான். |
| | சிங்கி-நஞ்சு. வதன்-கொலைஞன். |
| | 9 |
| | கொலையே பெரும்பாவம் விழுங்கும் கொடுநரகம் |
| 225 | சீவனை வதைசெயல் சிறந்த தாயுங்கால் பாவமோ ரைந்தினுங் கொலைசெய் பாவியைப் பூவல யம்பொறா தெரியும் பூதிதான் ஆவன வாய்திறந் தவனை நுங்குமே. |
|
| | பொய் களவு கள் காமம் கொலை ஆகிய ஐம்பெருந் தீமைகளுள் கொலையே மிகக் கொடுமையானது. கொலைப் பாவியை நிலவுலகம் பொறாது. எரிந்துகொண்டிருக்கும் கொடிய நரகம் அவனை எடுத்து விழுங்கும். |