| கொலை |
| பூவலயம்-நிலவுலகம். பூதி-கொடிய நரகம். நுங்கும்-விழுங்கும். |
| 10 |
| யார்க்கும் கொலைசெயும் உரிமை யின்று |
226 | அகந்தனை யுடையவ னழித்தல் நீதியெண் இகந்தபல் லுயிரெலா மியற்றினோற் கன்றிச் சகந்தனி லவைகளைத் தம்மைக் கொன்றிட உகந்தபே ருரிமையீங் கொருவர்க் கில்லையால். |
|
|
வீட்டுக்குரியவன் அவ்வீட்டை அழிப்பது முறையாம். அதுபோல, அளவிறந்த பல உயிர்களையும் படைத்துக் காக்கின்ற கடவுள் துடைப்பது முறைமையாகும். கடவுளுக்கல்லாமல் வேறு ஒருவர்க்கும் அவ்வுயிர்களையேனும், தம்மையேனும் கொல்லும் உரிமையில்லை. | | அகம்-வீடு. அழித்தல்-துடைத்தல். நீதி-முறைமை. சகம்-உலகம். |
| 11 |
| தடுக்க முடியாவிடில் தானுங் கொல்லுக |
227 | தனையெனி னும்பிறர் தம்மை யென்னினும் முனையொடு கொலவரு முசுண்டன் தன்னுயிர் இனைவதை செயலலா லுபாயம் வேறின்றேல் அனையனைக் கொல்கநல் தீர்வும் ஆற்றுக. |
|
| தன்னையாவது பிறவுயிர்களையாவது மற்றவன் செருக்குடன் கொல்ல வந்தால், அவனை எவ்வகை சூழ்ச்சியினாலாவது தடுக்க முடியாவிட்டால் கொல்லுக. கொலைப் பாவம் நீங்கக் கழுவாய் செய்க. |
| முனை-செருக்கு. முசுண்டன்-கீழ்மகன். உபாயம்-சூழ்ச்சி. |
| 12 |
| ------ |