பக்கம் எண் :

110

 அதி. 18-மது.
 அறியாமை நோய் மறதி கட்குடியால் ஆம்
228
ஞானமெய்ச் சுகம்புகழ் நலம்பெ றத்தனந்
தானமே செய்குவர் தகுதி யோரறிவு
ஈனமெய் மறதிநோ யிழிவு றப்பொருள்
வானென வழங்குவர் மதுவுண் போர்களே.
 தக்கோர் மெய்யுணர்வு துன்பில்லாத இன்பம் பெரும்புகழ் உடல்நலம் அடைவதற்குத் தம் நற்பொருளை நல்லவர்க்குத் தானம் செய்வர். கள்ளுண்போர் அறிவின்மை, உடல்மறதி, நீங்கா நோய், வசை முதலியன பெருதற்குத் தங்கள் பொருளை மழைபோல் வாரி இறைப்பர்.
 ஞானம்-மெய்யுணர்வு. தனம்-பொருள். மது-கள்.
 
1
 நஞ்சனைய கள்ளுண்பார் நாடுமனை மகவிழந்தார்
229
மருந்தநேர் மதுவுண்போர் மாண்ட பான்மையால்
அருந்தவப் பாலருக் கப்ப னில்லையால்
பொருந்திய மனையவள் பூண்ட நாண்களத்
திருந்ததே யென்னினு மிழந்த தொக்குமே.
 நஞ்சையொத்த கள்ளையுண்போர் இறந்தவரோ டொப்பர். அதனால், தவப்பேற்றால் வந்த பிள்ளைகளுக்குத் தந்தையரில்லை. மனைவிமார் கழுத்தில் தாலி காணப்பட்டாலும் தாலியிழந்தவர் நிலையேயாவர்.
 மருந்தம்-நஞ்சு. பாலர்-பிள்ளைகள். களம்-கழுத்து.
 2
  அறிவிழப்புச் சாவால் கள் நஞ்சினுங் கொடிதாம்
230
சித்தமு மவசமாஞ் செயல்வி கற்பமாம்
நித்தமு மரணமா நெடிய துன்பமாம்
அத்தமு நாசமா மவிழ்த மின்மையாற்
பித்தினு நஞ்சினும் பெரிது கள்ளரோ.
 கள்ளுண்பதால் உள்ளம் தன் வசமாவதில்லை; செய்யும் செயலும் தாறுமாறாகும்; அறிவிழந்து போவதால் நாளும் சாவாம்; சொல்லொணாப் பெருந்துன்பமாம்; பொருளழிவாகும்.