| மது |
| மாற்று மருந்து கிடையாது. பித்தையும் நஞ்சையும்விடக் கள் மிகவும் கொடியதாகும். |
| சித்தம்-உள்ளம். அவசம்-வசமின்மை; கட்டுக்கடங்காமை. அத்தம்-பொருள். அவிழ்தம்-மருந்து. |
| 3 |
| கள்ளுண்போர் கழிவுண்ணும் ஈயினை ஒப்போர் |
231 |
பாலினைத் தேனையின் பாகை நீத்துவெண் மாலியை மாந்துவோர் மலர்க்கள் நீத்துமெய்த் தோலிர ணந்தனைச் சூத கந்தனைக் கோலியுண் டுவக்குமீக் கூட்ட மொப்பரே. |
| | உயர்ந்த ஊணாகிய ஆன்பாலும் தேனும் வெல்லப்பாகும் விடுத்துக் கள்ளையுண்போர், ஈ மலரைவிட்டுப் புண்ணையும் கழிவுக் குருதியையும் வாரியுண்டு மகிழ்வதை யொப்பர். |
| இரணம்-புண். சூதகம்-கழிவுக்குருதி. |
| 4 |
| யாரையும் மருவச்செய் கள் மிக இழிவே |
232 | சீயென இகழ்தரு தேனுண் போர்களை நாயெனக் கோகென வாக்கு நாடொறும் ஆயினை மகளையில் லாக்குந் தான்கொண்ட சேயிழை யையும்விலை செய்யச் செய்யுமால். |
|
| நல்லோரால் `சீழு என்று இகழப்படும் கள், தன்னை உண்போர்களை நாயையும் கழுதையையும்போல் மதிப்பில்லாதவராக்கும். தாய், மகள், முதலிய முறையினரை முறையிலாது மருவச்செய்யும். மணந்த மனைவியையும் விலைபடுத்தச்செய்யும். |
| ஆயினை-தாயை. கோகு-கழுதை. |
| 5 |
| தீமையை நன்மையெனத் திரிப்பது கள்ளே |
233 | மலந்தனை யமுதென மாந்தச் செய்திடும் மலர்ந்தபூ வெனவன லள்ளச் செய்யும்வெஞ் சலந்தரும் பகைவர்கை தனக்குள் ளாக்குநல் நலந்தனை யழித்திடு நறவு நெஞ்சமே. |
|