பக்கம் எண் :

112

  நீதிநூல்
 
  நெஞ்சமே! கள், மலத்தை அமுதென்று நினைத்து உண்ணச் செய்யும்; தணலை விரிந்த பூவென அள்ளச்செய்யும்; மிக்க சினத்தைத் தரும் பகைவர்களைத் தனக்குத் துணையாகச் சேர்க்கும்; நன்மையைக் கெடுக்கும்.
  மாந்த-உண்ண. அனல்-தணல். சலம்-சினம். நறவு-கள்.
  6
 

கள்ளுண்பார்க் குலகம் கடுநர காகும்

234
அலருற ஈயெறும் பரவு தேளொடும்
பலவிலங் கணுகுறப் படுத்த பாயலின்
மலசல வாந்தியு மயக்குங் கோடலால்
நிலமது நரகமாம் நிதங்கள் ளுண்பார்க்கே.
  பழியுண்டாக, ஈ, எறும்பு, பாம்பு, தேள், விலங்கு முதலியன தம்மை வந்து நெருங்க, படுத்த படுக்கையிலே மலம், சிறுநீர், கக்கலுண்டாகக் கள்ளுண்பார் அறிவிழந்து மயங்கிக் கிடத்தலால், அவர்களுக்கு என்றும் உலகம் நரகமேயாகும்.
  அலர்-பழி. நிதம்-என்றும்.
  7
  கள்ளில் பிறப்பன கடுவினை பேராசை
235
கொஞ்சமுஞ் சுவையிலை குளத்தைக் கோணியே
நஞ்சென நுகர்வர்மெய் நலிய மூப்புற
விஞ்சிய ஆவல்தீ வினைகள் யாவுமே
குஞ்சுகள் கள்ளெனுங் கொடிய பக்கிக்கே.
  விரைவாக உடல்தளர மூப்புவர முகத்தைக்கோணி, சிறிதும் சுவையில்லாத கள்ளை நஞ்சுபோன்று உண்பார்கள். கள்ளாகிய கொடிய பறவைக்குப் பேராசை கொடுஞ்செயல் முதலிய எல்லாத் தீமையும் குஞ்சுகளாகும்.
  குளம்-நெற்றி; முகம். கோணல்-வெறுப்படையாளம். விஞ்சிய-பெருகிய. பக்கி-பறவை.
 

8