பக்கம் எண் :

113

  மது
 
  வேறு
  களவு மயக்கம் காமம் தருங் கள்
236
வறுமையால் களவு செய்வர்
   மையலாற் காமத் தாழ்வர்
குறுமைசேர் பகையி னால்வெங்
   கொலைசெய்வர் வசையி னோடுஞ்
சிறுமைதந் துயிரி ருந்துஞ்
   செத்தவ ராக்கி யிம்மை
மறுமையை யழிக்குங் கள்ளை
   மாந்தலெப் பயன்வேட் டம்மா.
  கள்ளுண்பவர்க்கு அக்கள்ளினாலே வறுமை விரைவில்வரும். அதனால் களவு செய்வர். அறிவிழந்து மயக்கங் கொள்ளுதலால் முறைதவறிக் காமந் துய்ப்பர். பொறுக்குந்தன்மை வாய்ந்த சிறு குற்றஞ் செய்தாரையும் பெரும் பகைவராக்கிக் கொலை செய்வர். பழியும் இழிவும் தரும். உயிரிருந்தும் செத்தவராவர். இம்மை மறுமைப் பயனிழப்பர். இப்படிப்பட்ட கள் அருந்துவது என்ன பயன் கருதி?
 
மையல்-மயக்கம். குறுமை-சிறுமை. மாந்தல்-குடித்தல். வேட்டு-விரும்பி.
  9
  வேறு
  வழிநடைப் பிணமாகும் வரும் இழிவு கள்ளால்
237
நரிநாய் பறவை சூழவழி
   நடுவிற் கிடந்த சவமதனை
உரியா ரிலரென் றிடுகாட்டுக்
   குடன்கொண் டேகிக் கட்டையில்வைத்து
எரியா நின்றேன் பிணம்விழித்திஃ
   தின்தேன் மயக்கென் றியம்பிமெய்கொள்
அரியை யவிக்கு முன்னமெழுந்
   தயற்கட் கடையுட் புகுந்ததுவே.
 

நீ.-8