பக்கம் எண் :

114

  நீதிநூல்
 
  கள்ளுண் களிப்பால் நரி, நாய், கழுகு, காகம் முதலியன சூழ நடுவழியில் சவமாய்க்கிடந்த ஓருடலை இடுகாட்டுக்குத் தூக்கிச் சென்று கட்டையில் வைத்து எரிக்கச்செய்தோம். பிணம் விழித்து `இவ்வாறாயது கள்ளின் களிப்புழு என்று கூறிற்று. நாங்கள் தீயை அவிப்பதற்கு முன்னமே குடிகாரன் எழுந்து பக்கத்துக் கள்ளுக் கடைக்குள் சென்றனன்.
  மெய்-உடம்பு. அரி-தீ.
  10
 
மயக்கும் பொருளால் விரைவில் மாளுவர்
238
அரக்கும் அரக்கு மதுகஞ்ச
   மாதி யாக வறியாமை
சுரக்குஞ் சரக்கைச் செய்தல்விற்றல்
   துணிந்து கொள்ளல் நுகர்தலெலாம்
பரக்கும் பழியைப் பாவத்தைப்
   பயக்கு மத்தீத் தொழிற்கிசைவோர்க்கு
இரக்குந் தொழிலும் ஆயுள்குறைந்து
   இறக்குந் தொழிலு மெய்துமால்.
  கள், தேன், கஞ்சா முதலிய குடித்தாருக்கு அறிவுமறைப்பைத் தரும். அப்பொருள்களைச் செய்தல் விற்றல் பழிக்கஞ்சாது வாங்கல் உண்டல் எல்லாம் பழி பாவத்தைத் தரும். இந்தத் தீய தொழிலுக்கு இணங்குவோர் வறுமையுற்றுப் பிச்சை எடுப்பர்; அகவை குறையும்; விரைவில் மாளுவர்.
  அரக்கும்-குடிக்கும். அரக்கு-கள். மது-தேன். கஞ்சம்-கஞ்சா. அகவை-வயது.
  11
 

------