பக்கம் எண் :

115

 அதி. 19-சூது
 சித்திரப் பெண்போல் செல்வம் சேரா சூதில்
239
வித்தமே மிகுமென வெஃகிச் சூதினில்
அத்தமார் அத்தமும் அழித்தல் தீட்டிய
சித்திர மாதெழி னம்பிச் சேர்ந்ததற்
பத்தினி தனையகல் பான்மை யொக்குமே.
 சூதில் வரும் சிறுபொருளே மிகுமென்னும் ஆசையால் மலைபோன்ற பெரும் பொருளையும் இழத்தல், ஓவியத்தின் பெண்ணழகை நம்பிச் சேர்ந்த கற்புறு மனைவியைக் கை விட்டது ஒக்கும்.
 வித்தம்-சிறுதாயம்; சூதாட்டப் பொருள். அத்தம்-மலை. ஆர்-போன்ற; அத்தம்-பொன்; பொருள். எழில்-அழகு. பத்தினி-கற்புறு மனைவி.
 
1
 கல்லாது சூதினிற் காலம் போக்கல் இழிவே
240
வையமேன் மானிடர் வாழும் நாட்சில
ஐயமில் கேள்விதான் அளவில ஆருயிர்
உய்யநல் வினைகளை உஞற்றி டாதுநாள்
பொய்யமர் சூதினிற் போக்கல் புன்மையே.
 உலகத்தில் மக்கள் வாழும் நாட்கள் சில; கேட்டுணர்ந்து ஒழுக வேண்டிய நூல்கள் அளவில்லன. அறிவு நிரம்பும் உயிர் ஈடேற ஒவ்வொரு நாளும் நன்மைகளைச் செய்யாது பொய்ச் சூதினில் காலம் போக்கல் இழிவாகும்.
 வையம்-உலகம். கேள்வி-நூல். உஞற்றல்-செய்தல். புன்மை-இழிவு.
 2
 புண்ணியமிலாதார் சூதால் போது போக்குவர்
241
ஓத விசையொடு மோடு நாளென
மேதையர் தந்தொழில் விடாது செய்குவர்
போதுநீட் டித்தெனப் பொறியி லாரதைச்
சூதெனும் வாள்கொடு துணிக்க நேர்வரே.
 அறிவான் மிக்கவர் சொல்ல முடியாத விரைவுடன் நாள் போகின்றதென்று தானமும் தவமும் ஆகிய தம் தொழிலை இடைவிடாதுசெய்வர். புண்ணியப்பேறு இல்லாதார் பொழுது